கொரோனா தடுப்புப் பணி - புதுச்சேரி அரசு மீது மத்திய அரசிடம் கிரண்பேடி புகார்

புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி

கொரோனா தடுப்புப் பணி தொடர்பாக புதுச்சேரி அரசு மீது மத்திய அரசிடம் கிரண்பேடி புகாரளித்துள்ளார்.

  • Share this:
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரியில் கொரோனா மேலாண்மைப் பணிகளை மேற்பார்வை செய்ய நிபுணத்துவம் பெற்ற குழுவை மத்திய அரசு நியமிக்க பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கோரியுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், மக்கள் மிகவும் அவதிப்படுவதால் புதுச்சேரியில் உள்ள மருத்துவ வளாகங்கள் முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளதா? என்பதை மதிப்பாய்வு செய்ய இக்குழுவை அவசரமாக நியமிக்க கேட்டுக்கொண்டதாக அவர் கூறினார்.

Also read: புதுவை - நடிகை மீரா மிதுனுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது உருவ பொம்மை எரித்த இளைஞர்கள்

முன்னதாக முதல்வர் நாராயணசாமிக்குக் கடிதம் எழுதியிருந்ததாகக் கூறிய அவர், அதில் முதல்வருக்கு உதவவும், ஆலோசனை செய்யவும் மருத்துவ ஆலோசனைக்குழு தேவை என பரிந்துரைத்தேன். அத்துடன் மூத்த அரசு செயலர் அன்பரசுவை நிவாரண மற்றும் மறுவாழ்வு ஆணையராக நியமித்து கொரோனா பணிகளை ஒருங்கிணைக்கவும் ஆலோசனை தெரிவித்திருந்தேன். ஆனால் முதல்வர் நாராயணசாமி இதை நிலுவையில் வைத்து விட்டார் என்றார்.

மக்கள் பாதிக்கப்படுவது பற்றியும் முக்கியமான விஷயங்களை அரசு செயல்படுத்தாததைப் பற்றியும் மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருப்பதாகவும் ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
Published by:Rizwan
First published: