கொரோனா குறித்து சொந்த செலவில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்..குவியும் பாராட்டுக்கள்..

கொரோனா குறித்து சொந்த செலவில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்..குவியும் பாராட்டுக்கள்..

கொரோனா விழிப்புணர்வு

இரண்டாம் கட்ட கொரோனா  பரவலைத் தடுக்கும் விதமாக முகக்கவசம் மற்றும் கிருமிநாசினி ஆகியவற்றை தனது சொந்த செலவில் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்.

  • Share this:
கொரோனா என்னும் உயிர்க்கொல்லி நோய் பரவல் காரணமாக கடந்த  ஒரு வருடமாக உலகையே புரட்டிப் போட்டிருக்கிறது என்றால் அது மிகையாகாது. இதன் காரணமாக பொருளாதார இழப்பு, வியாபார முடக்கம்,வேலை இழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் உலக மக்கள் அனைவரும் தற்போது வரை திண்டாடி வருகின்றனர்.

தற்போது, உருமாறிய கொரோனா என்ற உயிர்க்கொல்லி நோய் இரண்டாவது கட்ட பரவல் மிக தீவிரமடைந்துள்ளது.
என்றாலும் தடுப்பூசிகளை செலுத்தி கொள்வதோடு பொதுமக்கள் முகக் கவசங்கள் அணியவேண்டும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் மற்றும் சானிடைசர் எனப்படும் கிருமி நாசினி தொடர்ச்சியாக பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வை பொதுமக்களிடையே தொடர்ச்சியாக மேற்கொண்டு தான் வருகிறது.

இந்த நிலையில், சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட முருங்கபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியர் சரவணன், தமிழக அரசின் வேண்டுகோளுக்கிணங்க அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், மேலும் சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும். கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும் என்றும் கிராம மக்களிடையே  விழிப்புணர்வை தொடர்ச்சியாக ஏற்படுத்தி வருகிறார்.

முகக்கவசம் இல்லாமல் பயணிப்பவர்களுக்கு குறிப்பாக இருசக்கர வாகனங்கள் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கும்,  தேநீர் கடைகளுக்கு வருபவர்களுக்கும் முகக் கவசங்கள் மற்றும் கிருமி நாசினிகளை தனது சொந்த செலவில் வழங்கி,  கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் இல்லையெனில் அபராதத் தொகை செலுத்த நேரிடும் எனக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

தலைமையாசிரியரின் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியைகள் கண்ணகி, சரஸ்வதி, அந்தோணி சலேத் மேரி, கவிதா ஜெயலட்சுமி பூபாலன் மற்றும் சத்துணவு அமைப்பாளர் மணி செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்று வருகின்றனர்.

இந்த செயல் பகுதி கிராம மக்களிடையே மிகுந்த வரவேற்பினை பெற்றுள்ளது.

 
Published by:Tamilmalar Natarajan
First published: