புதுச்சேரியில் அரசுப் பள்ளிக்கு வந்த 12ம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரியில் அரசுப் பள்ளிக்கு வந்த 12ம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் அரசுப் பள்ளிக்கு வந்த 12ம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி
புதுச்சேரியில் அரசுப் பள்ளிக்கு வந்த 12ம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி
  • Share this:
புதுச்சேரியில் 9 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா காரணமாக மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும், தனி மனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்பன போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், முதல்வரின் தொகுதியான நெல்லித்தோப்பு தொகுதியின் காராமணி குப்பத்தில் இயங்கும் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப்பில் படிக்கும் ஒரு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

Also read: புதுச்சேரி: கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி குழந்தையுடன் டிஜிபி அலுவலகம் முன்பு தர்ணா செய்த பெண்..


கடந்த வெள்ளிகிழமை பள்ளிக்கு வந்து வீடு திரும்பிய மாணவன் ரெட்டியார்பாளையத்தில் உள்ள தனது வீட்டின் அருகே mobile vanல் பரிசோதனை செய்ததில் கொரானா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அந்த மாணவன் இருந்த பள்ளிக் கட்டடம் மட்டும் மூடப்பட்டது. பள்ளியில் மாணவர் சேர்க்கையும் சிறப்பு வகுப்புகளும் வழக்கம்போல் நடைபெறுகின்றன. மேலும், மாணவருடன் தொடர்பிலிருந்த 15 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
First published: October 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading