ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் விற்பனைக்கு கட்டுப்பாடு விதித்த மத்திய அரசு!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து வழங்கலாம் என்ற மருத்துவர்கள் பரிந்துரை மனநிறைவைத் தருகிறது.

ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் விற்பனைக்கு கட்டுப்பாடு விதித்த மத்திய அரசு!
மாதிரிப் படம்
  • Share this:
கொரோனாவைக் கட்டுப்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ள ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் விற்பனை தொடர்பாக மத்திய அரசு கட்டுப்பாட்டை விதித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 17 பேர் உயிரிழந்துள்ளனர். வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர்.

முன்னதாக, கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்புக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் என்ற மருந்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் பரிந்துரை செய்தது. இந்தநிலையில், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் விற்பனைக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு அறிவிப்பில், ‘கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து வழங்கலாம் என்ற மருத்துவர்கள் பரிந்துரை மனநிறைவைத் தருகிறது.


எனவே, ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருத்தின் விற்பனை மற்றும் விநியோகத்தை ஒழுங்குபடுத்துவது அவசியம். அவற்றின் தவறான பயன்பாட்டைத் தடுப்பது அவசியம். மருந்து மற்றும் அழகு சாதனப் பொருள்கள் சட்டம் 1940-ன் கீழ் ஹைட்ராக்ஸிகுளோரோ குயின் மருந்து கொண்டுவரப்பட்டுள்ளது’என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Also see:
First published: March 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading