முகப்பு /செய்தி /கொரோனா / அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்குகின்றன

அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்குகின்றன

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கொரோனா தொற்று பரவல் காரணமாக சென்னை தலைமை செயலகம் உட்பட அரசு அலுவலகங்கள் இன்று முதல் 50 பணியாளர்களுடன் இயங்க தொடங்கி உள்ளன.

  • 1-MIN READ
  • Last Updated :

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. அந்த வகையில், வேலை மற்றும் பணியாளர்களை அடிப்படையாக கொண்டு, அரசு ஊழியர்கள் 50% நபர்கள் மட்டுமே பணிக்கு வர வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், சுழற்சி முறையில் பணிக்கு வரும் ஊழியர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை பணிக்கு வரும் வகையில் திட்டமிடல் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் அரசு அலுவலகங்களில் இன்று முதல் 50 சதவிகித ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வந்தனர். வீட்டில் பணியாற்றும் ஊழியர்கள் தேவையின் அடிப்படையில் பணிக்கு வர உத்தரவு பிறப்பித்ததால் உடனடியாக பணிக்கு வர வேண்டும் என்றும், தங்கள் பணி புரியும் மாவட்டத்தில் இருந்து பணியாற்றுகிறார்களா என அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க.. கோவையில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு..

இன்று முதல் இந்த உத்தரவுகள் அனைத்தும் நடைமுறைக்கு வந்துள்ளது. தலைமைச்செயலகம் முதல் மாவட்ட அரசு அலுவலகங்கள் வரை இதே நடைமுறை 20ம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: CoronaVirus, Government Employees