தமிழ்நாடு அரசு டாக்டர்கள் மற்றும் நர்சுகள் சங்க கூட்டமைப்பின் கூட்டம் zoom செயலி மூலம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்குப் பின் அக்கூட்டமைப்பு சார்பில் நிறைவேற்றப்பட்ட 7 அம்ச தீர்மானங்கள் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டது.
அந்த அறிக்கையில் செவிலியர் கண்காணிப்பாளர் பிரிசில்லா கொரோனா தொற்றால்தான் இறந்ததாகத் தெரிவதால் அரசு அறிவித்தப்படி அவரது குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இனி வரும் காலங்களில் கொரோனா தொற்றால் மருத்துவரோ, செவிலியரோ, பிற பணியாளர்களோ இறந்தால் அவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம், பணப்பயன் மற்றும் வாரிசுக்கு வேலை உள்ளிட்டவை வழங்குவது குறித்து மறுநாளே அரசு அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் அடுத்தக்கட்ட போராட்டத்திற்கு அரசு மருத்துவர்கள் மற்றும் நர்சுகள் சங்க கூட்டமைப்பு தள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow
News18Tamil.com @
Facebook,
Twitter,
Instagram,
Sharechat,
Helo,
WhatsApp,
Telegram,
TikTok,
YouTube
Also see:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.