மோசடிகளை தவிர்க்க கோவின் போர்ட்டலில் புதிய பாதுகாப்பு அம்சம் சேர்ப்பு!

கோவின் போர்ட்டல்

கோவிட்-19 தடுப்பூசிகள் குறித்து பல்வேறு எதிர்மறை தகவல்கள் பரவினாலும், தொற்றிலிருந்து தப்பிக்க இருக்கும் ஒரே வழி என்பதால் பெரும்பாலான மக்கள் தடுப்பூசி போட்டு கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

  • Share this:
கோவிட்-19 தொற்றின் இரண்டாம் அலை நாட்டில் அதிவேகமாக பரவி வரும் நிலையில், தொற்று பரவலை குறைக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் முக்கியமான படியாக பார்க்கப்படுவது மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டு கொள்ள செய்வதே. தடுப்பூசிகள் குறித்து பல்வேறு எதிர்மறை தகவல்கள் பரவினாலும், தொற்றிலிருந்து தப்பிக்க இருக்கும் ஒரே வழி என்பதால் பெரும்பாலான மக்கள் தடுப்பூசி போட்டு கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தடுப்பூசி போட்டு கொள்வதற்கான ஸ்லாட்டை மக்கள் ஆரோக்கிய சேது மற்றும் கோவின் இணையதளம் மூலம் முன் பதிவு செய்து வருகின்றனர். இதன்படி கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள கோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்பவர்களில் ஒரு சிலரால் குறிப்பிடப்பட்ட தேதியில் தடுப்பூசி மையங்களுக்கு சென்று முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ள முடியாமல் போகிறது.

ஆனால் இப்படி  தடுப்பூசி போடா முடியாமல் போனவர்கள் சிலருக்கு அவர்கள் பதிவு செய்திருக்கும் மொபைல் நம்பருக்கு அவர்கள் தடுப்பூசி போட்டு கொண்டு விட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இது தொடர்பாக நாடு முழுவதும் ஏராளமான புகார்கள் பதிவானது.

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் தடுப்பூசி போடும் மருத்துவ ஊழியர், முன்பதிவு செய்த நபரை தடுப்பூசி போட்டதாக கம்ப்யூட்டரில் தவறாக பதிவு செய்தது தான் இதற்கு காரணம் என தெரியவந்தது. இதனை அடுத்து கோவின் அமைப்பில் ‘data entry error’ ஏற்பட்டுள்ளதை அரசு ஒப்பு கொண்டுள்ளது. இது போன்ற தவறுகள் மற்றும் மோசடிகளை குறைக்கவும், ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி கிடைக்கும் என்பதை உறுதி செய்வதற்கும் இப்போது 4 இலக்க பாதுகாப்பு குறியீட்டை ( 4-digit security code) அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

ALSO READ :  கொரோனா வைரஸ் வருகிறது... 8 ஆண்டுகளுக்கு முன்பே கணித்த நெட்டிசன் - டிவிட்டரில் வைரல்

இது தொடர்பாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சில நேரங்களில் கோவின் போர்ட்டல் மூலம் கொரோனா தடுப்பூசிக்கான ஸ்லாட்டை ரிஜிஸ்டர் செய்த மக்கள் திட்டமிடப்பட்ட தேதியில் தடுப்பூசி போட்டு கொள்ளாத போதும், அவர்கள் தடுப்பூசி எடுத்து கொண்டதாக தவறாக செய்தி அனுப்பப்பட்டது எங்களது கவனத்திற்கு வந்தது. இதனை அடுத்து வெளிப்படை தன்மையை உறுதிப்படுத்த, மே 8 முதல் சரிபார்ப்புக்கு புதிய 4 இலக்க பாதுகாப்பு குறியீடு அறிமுகப்படுத்தப்படும் என்று கூறியது. தடுப்பூசி போட ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இந்த புதிய பாதுகாப்பு அம்சம் பொருந்தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தடுப்பூசி பெறுவதற்கு சற்று முன் தேவை..

இனி கோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்பவர்களுக்கு 4 இலக்க பாதுகாப்பு எண் வழங்கப்படும். தடுப்பூசி போட பதிவு செய்துள்ள பயனாளி தகுதியான நபரா என சரிபார்த்த பின், தடுப்பூசி போடுவதற்கு முன் பயனாளியிடம் 4 இலக்கப் பாதுகாப்பு எண்ணை தடுப்பூசி போடும் மருத்துவ ஊழியர் கேட்பார்கள். பின் அதனை கோவின் இணையதளத்தில் பதிவு செய்வார்கள். இதன் மூலம் ஒரு நபரின் தடுப்பூசி நிலையை (vaccination status) சரியாகப் பதிவுசெய்ய முடியும்.

ஒப்புதல் சீட்டில் செக்யூரிட்டி கோட்..

தடுப்பூசி போடுவதற்கான நியமனம் ஒப்புதல் சீட்டில் (appointment acknowledgement slip) இந்த 4 இலக்க பாதுகாப்பு எண் பிரிண்ட் செய்யப்படும். மேலும் இது தடுப்பூசி போடும் ஊழியருக்கு தெரிவிக்கப்படாது. முன்பதிவு செய்த பின், உறுதி செய்யப்படும் குறுஞ்செய்தியில் இந்த 4 இலக்க எண் அனுப்பப்படும். இந்த ஒப்புதல் சீட்டை செல்போனில் சேவ் செய்து வைத்தும் காட்டலாம்.

ALSO READ :  தமிழகத்தில் பணம் கொடுத்தால் கூட பல்ஸ் ஆக்ஸிமீட்டர் கிடைக்காத நிலை... காரணம் என்ன?

வேறு யாரும் பெற முடியாது..

இந்த பாதுகாப்பு குறியீடு ஆன்லைன் மூலம் ஒருவர் முன்பதிவு செய்த தடுப்பூசியை வேறு யாரும் பெற முடியாது என்பதை உறுதி செய்யும். ஒரு குடிமகனின் தடுப்பூசி நிலை தொடர்பான தரவு உள்ளீடுகள் சரியாக பதிவு செய்யப்படுவதை இது உறுதி செய்யும் என்றும், தடுப்பூசி பாதுகாப்பு வசதிக்காக கோவினில் வழங்கப்பட்ட ஆள்மாறாட்டம் மற்றும் நெகிழ்வுத்தன்மையை தவறாக பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் இது குறைக்கும் என்றும் அரசு கூறியுள்ளது.

தடுப்பூசி மையம் செல்வோர் கவனத்திற்கு..

கோவின் போர்டல் மூலம் தடுப்பூசி முன்பதிவு செய்தவர்கள் தடுப்பூசி மையம் செல்லும் போது எஸ்எம்எஸ் அல்லது அச்சிடப்பட்ட சந்திப்பு சீட்டில் 4 இலக்க பாதுகாப்பு குறியீட்டை கொண்டு செல்ல வேண்டும். இதனால் 4 டிஜிட் செக்யூரிட்டி கோடை சரி பார்ப்புக்கு கொடுக்க முடியும்.

ALSO READ :  கொரோனா தடுப்பூசி விலை 6 மடங்கு உயர்வு.. உலகிலேயே அதிக விலைக்கு தடுப்பூசி விற்பனை செய்யும் நாடாக மாறிய இந்தியா

தடுப்பூசி சான்றிதழ்

தடுப்பூசி போடும் இடத்தில் 4 இலக்க பாதுகாப்பு குறியீட்டை அவசியம் வழங்க வேண்டும். ஏனெனில் பாதுகாப்பு குறியீட்டைக் கொண்டு தடுப்பூசி பதிவு அப்டேட் செய்த பின்னரே கடுப்பூசி போட்டு கொண்டதற்கான டிஜிட்டல் சான்றிதழ் உருவாக்கப்படும். தடுப்பூசி போட்டு கொண்ட பின், உறுதி செய்யப்பட்டதற்கான எஸ்.எம்.எஸ், மின்னணு சான்றிதழ் இணைப்பு ஆகியவை தாங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணில் மக்கள் பெறலாம். ஒருவேளை தடுப்பூசி போட்டு கொண்டதற்கான எஸ்.எம்.எஸ் வரவில்லை என்றால், அவர்கள் தடுப்பூசி போட்ட ஊழியர்/ தடுப்பூசி போடப்பட்ட மையத்தின் பொறுப்பாளர் ஆகியோரை தொடர்பு கொண்டு கேட்கலாம்.
Published by:Sankaravadivoo G
First published: