CoWin Aarogya Setu : கோவின், ஆரோக்கிய சேது வழியே ஆன்லைனில் தடுப்பூசி சான்றிதழை டவுன்லோட் செய்வது எப்படி?

கோவின், ஆரோக்கிய சேது

நீங்கள் தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றிருந்தால், அடுத்ததாக நீங்கள் செய்ய வேண்டியது அதற்கான தடுப்பூசி சான்றிதழை டவுன்லோட் செய்வது தான்.

  • Share this:
நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா கேஸ்களுக்கு மத்தியில், சரியான முன்னெச்சரிக்கைகள் மற்றும் கோவிட் -19 தடுப்பு நடவடிக்கைகளை முறையாக கடைபிடிக்காவிட்டால் இன்னும் தொற்று பன்மடங்கு தீவிரமாகி விடும் என்று சுகாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

தொற்றிலிருந்து தப்பிக்க தற்போது தடுப்பூசி தான் ஒரேவழி என்று நிபுணர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இந்தியாவில் தற்போது புழக்கத்தில் உள்ள 2 தடுப்பூசிகள் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் கோவிஷீல்ட், மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் ஆகியவை ஆகும். திடீரென அதிகரித்த தொற்றின் வேகம் காரணமாக அன்றாடம் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மூன்றரை லட்சத்திற்கும் மிகாமல் இருக்கிறது.

தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் தட்டுபாடுகளுக்கு மத்தியில் நாடு நெருக்கடியான சூழலை கடந்து வருகிறது. கடந்த மாதம் வரை 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. இரண்டாம் அலை சுனாமி போல தாக்கியதால் அதிகரித்த பாதிப்புகளை கருத்தில் கொண்டு, கடந்த 1ம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்குமே தடுப்பூசி போட அனுமதி வழங்கப்பட்டது.

ALSO READ : கொரோனா வைரஸ் வருகிறது... 8 ஆண்டுகளுக்கு முன்பே கணித்த நெட்டிசன் - டிவிட்டரில் வைரல்

தடுப்பு மருந்து பற்றாக்குறை காரணமாக பல்வேறு மாநிலங்களில் 18 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பினும், சில மாநிலங்களில் அறிவித்தபடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

தடுப்பூசியின் முதல் டோஸை ஒருவர் பெற்றவுடன், பெயர், வயது, பாலினம் போன்ற அனைத்து அடிப்படை விவரங்களையும், குறிப்பிட்ட நபர் செலுத்தி கொண்டுள்ள தடுப்பூசியின் பெயர், முதல் டோஸ் போட்டு கொண்ட தேதி போன்ற அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய ஒரு தடுப்பூசி சான்றிதழ் (vaccination certificate) அரசால் வழங்கப்படுகிறது. எனவே நீங்கள் தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றிருந்தால், அடுத்ததாக நீங்கள் செய்ய வேண்டியது அதற்கான தடுப்பூசி சான்றிதழை டவுன்லோட் செய்வது தான்.

ALSO READ : மோசடிகளை தவிர்க்க கோவின் போர்ட்டலில் புதிய பாதுகாப்பு அம்சம் சேர்ப்பு!

ஆரோக்கிய சேது app மூலம் கோவிட் -19 தடுப்பூசி சான்றிதழை எவ்வாறு டவுன்லோட் செய்வது?

முதலில் ஆண்ட்ராய்டின் கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது iOS-ன் ஆப்ஸ்டோரிலிருந்து ஆரோக்கிய சேது (Aarogya Setu) app-ஐ டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். பின்னர் கீழ்காணும் இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றவும்:

* முதலில் உங்கள் மொபைலில் டவுன்லோட் செய்யப்பட்ட ஆரோக்கிய சேது app-ஐ ஓபன் செய்து கொள்ளுங்கள் (உங்கள் Bluetooth ஆன் செய்யப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்)

* உங்கள் மொபைல் எண்ணை பயன்படுத்தி உள்நுழைந்து மேலே உள்ள கோவின் (CoWin) tab-ஐ கிளிக் செய்ய வேண்டும்.

ALSO READ : கொரோனா: ஏன் ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்கள் தேவை? சரியானதை தேர்தெடுப்பது எப்படி?

* தடுப்பூசி சான்றிதழ் விருப்பத்தை (Vaccination Certificate option) க்ளிக் செய்த பின் உங்கள் 13 இலக்க யூசர் குறிப்பு ஐடியை (beneficiary reference ID)-ஐ என்டர் செய்ய வேண்டும்.

* இப்போது உங்கள் தடுப்பூசி சான்றிதழை பெற டவுன்லோட் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

COWIN போரட்டலில் இருந்து தடுப்பூசி சான்றிதழை எவ்வாறு டவுன்லோட் செய்வது?

* COWIN-ன் அதிகாரப்பூர்வ வெப்சைட்டான https://www.cowin.gov.in/ என்ற வெப்சைட்ட்டிற்குள் செல்லவும்

* Sign In / Register என்று குறிப்பிடப்பட்டிருக்கும் பட்டனை கிளிக் செய்யவும்

* உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைப் பயன்படுத்தி, அந்த எண்ணிற்கு வரும் OTP-ஐ பயன்படுத்தி உள்நுழைய வேண்டும்

* நீங்கள் உள்நுழைந்ததும், உங்கள் பெயரின் கீழ் சான்றிதழ் டேப் (Certificate tab ) இருக்கும்

* உங்கள் தடுப்பூசி சான்றிதழின் soft copy-ஐ பெற இப்போது டவுன்லோட் பட்டனை க்ளிக் செய்க...

முதல் டோஸைப் நீங்கள் இன்னும் பெறவில்லை எனில் தடுப்பூசிக்கு பின்வருமாறு பதிவு செய்யலாம்:

* COWIN-ன் அதிகாரப்பூர்வ வெப்சைட்டான https://www.cowin.gov.in/ என்ற வெப்சைட்டிற்குள் செல்லவும்.

* தடுப்பூசிக்கு பதிவு செய்ய உங்கள் 10 இலக்க மொபைல் எண் அல்லது ஆதார் எண்ணை உள்ளிடவும்.

* உங்கள் மொபைல் எண்ணை வழங்கிய பிறகு நீங்கள் ஒரு OTP-ஐ பெறுவீர்கள், அதை சமர்ப்பிக்கவும்.

* ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி கிடைக்கும் என்பதை உறுதி செய்ய சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சப்படி இப்போது நீங்கள் 4 இலக்க பாதுகாப்பு குறியீட்டை பெறுவீர்கள்

* பதிவு செய்தற்கு பிறகு, தடுப்பூசி போட ஒரு திட்டமிடப்பட்ட தேதி மற்றும் நேரத்தில் குறிப்பிட்ட தடுப்பூசி மையத்திற்கு செல்ல வேண்டும்.

ALSO READ : கொரோனா தடுப்பூசி விலை 6 மடங்கு உயர்வு.. உலகிலேயே அதிக விலைக்கு தடுப்பூசி விற்பனை செய்யும் நாடாக மாறிய இந்தியா

* தடுப்பூசி போடுவதற்கு முன் பயனாளியிடம் 4 இலக்கப் பாதுகாப்பு எண்ணை தடுப்பூசி போடும் மருத்துவ ஊழியர் கேட்பார்கள். பின் அதனை கோவின் இணையதளத்தில் பதிவு செய்வார்கள். இதன் மூலம் ஒரு நபரின் தடுப்பூசி நிலையை (vaccination status) சரியாகப் பதிவுசெய்ய முடியும்.

* அதைத் தொடர்ந்து நீங்கள் Reference ID பெறுவீர்கள் மேலும் ஆரோக்ய சேது App மூலம் மேற்கண்டபடி உங்கள் தடுப்பூசி சான்றிதழை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
Published by:Sankaravadivoo G
First published: