முகப்பு /செய்தி /கொரோனா / ஜெர்மனியில் கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களிடம் பரிசோதிக்க அனுமதி!

ஜெர்மனியில் கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களிடம் பரிசோதிக்க அனுமதி!

கோப்புப் படம்

கோப்புப் படம்

ஜெர்மனியை தொடர்ந்து இங்கிலாந்திலும் ஆகஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் உயிரியல் விஞ்ஞானிகள் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்து அதை மனிதர்களிடம் சோதனை செய்து பார்க்க அனுமதி பெற்றுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :

ஜெர்மனியில் கொரோனாவுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பு மருந்தை மனிதர்களிடம் பரிசோதிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

முதலில் விலங்குகளிடம் பரிசோதித்து வெற்றிகண்டுள்ள நிலையில், தன்னார்வலர்களிடம் இதைச் செலுத்தி சோதனை நடத்த அந்நாட்டு மருந்து ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து, தாமாக முன்வந்த 18 வயது முதல் 55 வயதுடைய 200 சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி வைரஸில் இருந்து குணப்படுத்தும் முயற்சியை ஜெர்மன் பயோடெக் நிறுவனத்தின் விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர். இரண்டாவது கட்டமாக, நோயிலிருந்து அதிக ஆபத்து உள்ளவர்கள் மற்றும் வேறு நபர்கள் மீதும் மருந்து செலுத்தி சோதனை நடத்தவும் விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

ஜெர்மனியை தொடர்ந்து இங்கிலாந்திலும் ஆகஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் உயிரியல் விஞ்ஞானிகள் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்து அதை மனிதர்களிடம் சோதனை செய்து பார்க்க அனுமதி பெற்றுள்ளது. இதையடுத்து இன்று தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னார்வலரிடம் இந்த மருந்தை செலுத்தி ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சோதனை நடத்த உள்ளனர்.

Also see:

First published:

Tags: CoronaVirus, England, Germany