கைகளை எப்படி கழுவ வேண்டும்...? டூடுல் வெளியிட்டுள்ள கூகுள்

”கைகளை தூய்மையாக வைத்திருப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து, முதன்முறையாக ஆதாரப்பூர்வமாக நிரூபித்த 19-ம் நூற்றாண்டின் மருத்துவர் இக்னாஸ் செம்மல்வெய்ஸை போற்றும் விதமாகவும் இந்த டூடுல் அமைந்துள்ளது”

கைகளை எப்படி கழுவ வேண்டும்...? டூடுல் வெளியிட்டுள்ள கூகுள்
கைகளை எப்படி கழுவ வேண்டும்: கூகுள் டூடுல்
  • Share this:
கொரோனா வைரஸ் தொற்று, உலகம் முழுவதும் அச்சத்தை பரப்பிக் கொண்டிருக்கும் வேளையில், கைகளை எப்படி கழுவ வேண்டும் என்று ஆறு வழிமுறைகளை விளக்கும் விதமாக கூகுள் தேடுபொறி புதிய டூடுலை வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதலால், உலக அளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,000 தாண்டியுள்ளது. இந்நிலையில் கொரோனா வராமல் தடுக்க எப்படி சுத்தமாக இருக்க வேண்டும் என்றும் எப்படி கைகளை கழுவ வேண்டும் என்றும் உலகளவில் அனைவருக்கும் விழிப்புணர்வை அந்ததந்த நாடுகள் ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் நாம் அனைவரும் இணையதளத்தில் அதிகபட்சமாக கூகுள் பயன்படுத்தப்படுவதால், கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சியில் இந்த விழிப்புணர்வு டூடுல் மூலமாக கூகுள் வெளியிடப்பட்டுள்ளது. கைகளை தூய்மையாக வைத்திருப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து, முதன்முறையாக ஆதாரப்பூர்வமாக நிரூபித்த 19-ம் நூற்றாண்டின் மருத்துவர் இக்னாஸ் செம்மல்வெய்ஸை போற்றும் விதமாகவும் இந்த டூடுல் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
Also see...

 
First published: March 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்