• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • Sundar Pichai | மீண்டும் தலைதூக்கும் கொரோனா பாதிப்பு… வொர்க் ஃப்ரம் ஹோம் முறையை நீட்டித்த கூகுள்!

Sundar Pichai | மீண்டும் தலைதூக்கும் கொரோனா பாதிப்பு… வொர்க் ஃப்ரம் ஹோம் முறையை நீட்டித்த கூகுள்!

கூகுள் அதன் அலுவலகம் திரும்பும் திட்டத்தை மீண்டும் தாமதப்படுத்தும் முடிவு மற்ற முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்கள் எடுத்த செயல்களைப் போன்றதே ஆகும்.

  • Share this:
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்புகள் மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில், தொற்றுநோய் தொடர்பான நிலையற்ற தன்மையை காரணம் காட்டி, கூகுள் நிறுவனம் அதன் ஊழியர்களை ஜனவரி 10ஆம் தேதி வரை வொர்க் ஃப்ரம் ஹோம் முறையை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

இதனால், கூகுள் நிறுவனத்தின் ஊழியர்கள் குறைந்தபட்சம் 2022ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி வரை அலுவலக வளாகத்திற்கு வந்து பணி செய்வது அவரவர் விருப்பம் என்று ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி தங்கள் ஊழியர்களுக்கு அனுப்பிய ஒரு குறிப்பில் தெரிவித்துள்ளார். பொதுவாக, அந்நிறுவன ஊழியர்கள் அலுவலகங்களுக்குத் திரும்பும் தேதியை 30 நாட்களுக்கு முன்னதாக அந்நிறுவனமே அறிவிக்கும். ஆனால், அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் கொரோனா நிலைமை சற்று மோசமாகி வருவதால் தங்கள் ஊழியர்கள் அலுவலகங்களுக்கு திரும்ப வேண்டிய தேதியை சுந்தர் பிச்சை குறிப்பிடவில்லை.

“2022 ஜனவரி 10ஆம் தேதிக்குப் பிறகு, நிலைமைகளின் அடிப்படையில் வீட்டிலிருந்து பணிபுரியும் முறையை எப்போது முடித்துக்கொள்வது என்பதை தீர்மானிக்க மற்ற நாடுகளின் சூழ்நிலையைப் பொருத்து நாங்கள் செயல்படுத்துவோம்,” என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.

Must Read | ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால்… கூகுள் சுந்தர் பிச்சை மனைவி அஞ்சலியின் கதை!

முன்னதாக, கூகுள் நிறுவனம் தங்களது ஊழியர்களை கடந்த அக்டோபர் 18 வரை வீட்டிலிருந்து பணிப்புரிய அனுமதித்திருந்தது. இதுகுறித்து, சுந்தர் பிச்சை தங்கள் ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலானது கூகுள் ப்ளாகில் பதிவிடப்பட்டிருந்தது. இதற்கிடையே, தொற்றுநோய்க்கு முன்பு இருந்த அதே அலுவலகங்களுக்கு சுமார் 60% ஊழியர்களை அழைக்கும் முடிவில் இருந்தனர். பின்னர், ஆகஸ்ட் மாதத்தில் 85% ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்று தொலைதூரத்தில் வேலை செய்ய அல்லது நிறுவனத்தின் அலுவலகங்கள் முழுமையாக திறந்தவுடன் இடமாற்றம் செய்ய ஒப்புதல் அளித்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கூகுள் அதன் அலுவலகம் திரும்பும் திட்டத்தை மீண்டும் தாமதப்படுத்தும் முடிவு மற்ற முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்கள் எடுத்த செயல்களைப் போன்றதே ஆகும். ஏனெனில், ஃபேஸ்புக் நிறுவனம் சமீபத்தில் தங்கள் அமெரிக்க ஊழியர்களிடம் ஜனவரி மாதம் வரை அலுவலகங்களுக்குத் திரும்பத் தேவையில்லை என்று கூறியது. மேலும், ஆப்பிள் நிறுவனமும் தங்கள் ஊழியர்கள் அலுவலகம் திரும்பும் திட்டங்களைப் பின்னுக்குத் தள்ளியது. ஆகவே, மீண்டும் கொரோனா சூழலை கண்காணித்து அதன் பின்னர் தங்கள் ஊழியர்களை அலுவலகங்களுக்கு அழைக்கும் முடிவில் பெருநிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Archana R
First published: