கொரோனா 2ஆவது அலையைத் தடுத்து நிறுத்துவதற்காக, ‘தொற்று பரவலை நிறுத்துங்கள், தொற்றுநோயை நசுக்குங்கள், கொரோனா 2ஆவது அலையைத் தடுப்பதற்கு முக கவசம், சமூக இடைவெளி, சுகாதாரம், காற்றோட்டம்’ என்ற ஆலோசனை குறிப்புகளை அறிவியல் ஆலோசகர் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “நல்ல காற்றோட்டம், பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து மற்றொருவருக்கு தொற்று பரவும் அபாயத்தை குறைக்கும். ஜன்னல்கள், கதவுகளை திறந்து வைத்திருப்பதின் மூலமும், காற்று வெளியேற்ற அமைப்புகளை பயன்படுத்துவதின் மூலமும் எந்தவொரு வாசனையையும் காற்றில் இருந்து நீர்த்துப்போகச்செய்ய முடியும். இதே போன்று, காற்றோட்டமான இடங்கள், நல்ல காற்றோட்டம், காற்றில் உள்ள வைரசை குறைக்கிறது. பரவும் அபாயத்தையும் குறைக்கிறது.
நம் வீட்டில், வேலை செய்யும் இடங்களில் நல்ல காற்றோட்டம் நம்மைப் பாதுகாக்குகிறது. அலுவலகங்களுக்குள், வீட்டுக்குள், பெரிய பொது இடங்களுக்குள் வெளிப்புற காற்றை உள்ளுக்குள் வர விட அறிவுறுத்தப்படுகிறது.
நகர்ப்புறங்களிலும், வெளிப்புறங்களிலும் வீடுகளிலும், அலுவலகங்களிலும், பிற கட்டிடங்களிலும் காற்றோட்டத்தை அதிகரிக்க அவசர முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் எக்ஸ்ஹாஸ்ட் பேன்கள் (காற்றை வெளியேற்றும் பேன்கள்) பலன் அளிக்கும். அலுவலகங்கள், அரங்கங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றில் கேபிள் விசிறி அமைப்புகள், கூரை வென்டிலேட்டர்கள் ஏற்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட நபர் சுவாசிக்கிறபோது, பேசுகிறபோது, பாடுகிறபோது, சிரிக்கிறபோது, இருமுகிறபோது, வெளியேறுகிற நீர்த்துளிகள், நாசி வெளியேற்ற நீர்த்துளிகள் தொற்று பரவுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
Must Read : பிரதமர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் எங்களை பேச விடவில்லை - மம்தா பானர்ஜி
அறிகுறியில்லாத
கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களாலும் தொற்று பரவும். எனவே முக கவசம் அணிவது குறிப்பாக இரட்டை
முக கவசம் அணிவது அல்லது என் 95 முக கவசம் அணிவதைத் தொடர வேண்டும்.” இவை அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்களாகும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.