கொரோனா காலத்தில் மற்ற வர்த்தகங்கள் முடங்கியுள்ள நிலையில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பது ஏன்?

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் புதிய உச்சங்களை தொட்டு வருகிறது. கொரோனா காலத்தில் மற்ற வர்த்தகங்கள் முடங்கியுள்ள நிலையில் தங்கத்தின் மீதான மோகம் ஏன்? என்ற காரணத்தை காணலாம்.

கொரோனா காலத்தில் மற்ற வர்த்தகங்கள் முடங்கியுள்ள நிலையில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பது ஏன்?
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: July 31, 2020, 9:07 PM IST
  • Share this:
2020ம் ஆண்டை பொறுத்தவரை, தங்கத்தின் மீதான முதலீடு மட்டுமே மிகப் பெரிய லாபத்தை கொடுத்து வருகிறது. தங்கத்தின் விலை கொரோனா பரவலின் வேகத்தை விட அதிகரித்து வருகிறது. 10 கிராம் தங்கத்தின் விலை 50 ஆயிரத்தை கடந்த போதிலும், அதன் மீதான முதலீடு அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதியிலிருந்து இன்று வரை தங்கத்தின் விலை 35 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது.

இதேப்போல் தங்கத்தின் மீதான முதலீடு மட்டுமே முதலீட்டாளர்களுக்கு அதிக லாபத்தை ஈட்டி தந்துள்ளது. தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு 34.2 சதவிதிகம் லாபம் கிடைத்துள்ளது. வங்கி முதலீடுகளில் 5 சதவிகிதம் மட்டும் லாபம் கிடைத்துள்ளது. ரியல் எஸ்டேட், சிறிய மற்றும் பெரு பங்கு முதலீடுகள், பங்குச்சந்தைகள் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்தவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

1920- ஆம் ஆண்டு முதலே தங்கத்தின் விலை ஏறுமுகத்திலேயே உள்ளது. 2006 - ஆம் ஆண்டு வரை 10 கிராம் தங்கத்தின் விலை பத்தாயிரம் ரூபாய்க்கு கீழே தான் இருந்தது. கடந்த பத்து ஆண்டுகளில் 141 சதவிகிதம் விலை அதிகரித்துள்ளது. 1970ம் ஆண்டு 184 ரூபாய்க்கு விற்கப்பட்ட 10 கிராம் தங்கம், 2010- ஆம் ஆண்டு 18 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்ந்தது. தற்போது 55 ஆயிரத்தை கடந்துள்ளது.


தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் அதிகரிக்க பல காரணங்கள் முன் வைக்கப்படுகின்றன. முக்கியமான காரணமாக கூறப்படுவது கொரோனா வைரஸ் தாக்கம், வங்கிகளில் வழங்கப்படும் குறைந்த வட்டி, அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தக போர், சர்வதேச பொருளாதார மந்த நிலை, ஆசிய பங்குச்சதைகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, இந்திய ரூபாய் மதிப்பின் சரிவு ஆகியவை தங்கத்தின் விலை ஏற்றத்திற்கான காரணிகள் ஆகும்.

தங்கத்தின் மீது பலவகையான முதலீடுகள் உள்ளன. அதில் முக்கியமானது ஆபரணத்தின் மீதான மக்களின் மோகம். ஆபரணங்களில் வடிவிலேயே 47 சதவிதிக தங்கம் முதலீடு செய்யப்படுகிறது. தனி நபர்களின் மூலம் 21.6 விழுக்காடும், மற்ற வகையில் 14.2 சதவிகிதமும் முதலீடூ செய்யப்படுகிறது. அதிகாரபூர்வ இருப்பில் 17.2 விழுக்காடு வைக்கப்பட்டுள்ளது.
First published: July 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading