கொண்டாட்டங்களையும் விழுங்கிய கொரோனா - ஆடு விற்பனை முடங்கியதால் வேதனையில் வியாபாரிகள்
பக்ரீத் பண்டிகைக்காக புதுச்சேரியில் 10,000 - க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனையாகும். இதற்காக ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் சென்று ஆடுகளை வியாபாரிகள் வாங்கி வருவது வழக்கம்.

ஆடுகள்
- News18 Tamil
- Last Updated: July 31, 2020, 10:26 AM IST
200க்கும் மேற்பட்ட வியாபாரிகள் உள்ள புதுச்சேரியில் கொரோனா காரணமாக வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் அண்டை மாவட்டங்களான விழுப்புரம், கடலூர் ஆகிய பகுதிகளில் சென்று வீடுகளில் வளர்க்கப்படும் ஆடுகளை அதிக விலைக்கு வாங்கி வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அதற்கான வாகனச் செலவு இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. இருப்பினும் மக்களிடையே ஆடு வாங்கும் ஆர்வம் குறைந்து இருக்கிறது. காரணம் கொரோனாவால் வருமானம் இன்றி அனைத்து பிரிவு மக்களும் 5 மாதங்களாய் முடங்கியுள்ளனர்.
ALSO READ : குருவிக்காக ஒரு மாதம் இருளில் நடமாடும் கிராம மக்களின் வளர்ச்சிக்கு திமுக ₹ 50 ஆயிரம் நிதியுதவி 20,000 ரூபாய் மதிப்பிலான ஆட்டை 11,000 ரூபாய்க்கு விற்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாக வியாபாரிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். ஒரு பட்டியில் 200 ஆடுகள் விற்ற சூழ்நிலையில் இன்றைய நிலையில் 40 கூட விற்கவில்லை. மக்களிடையே போதிய பணம் இல்லாத காரணத்தால் குறைந்த விலைக்கு ஆடுகளை கேட்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டு பல சந்தைகளுக்கு சென்று ஆடுகளை வாங்கி வந்ததாகவும் இந்த முறை குறைந்த அளவிலேயே ஆடுகள் விற்பனை ஆவதால் வாங்கி வந்த ஆடுகளை விற்பனை செய்ய முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.கொரோனா துவங்கியவுடன் ஒரு கிலோ ஆட்டு கறி 900 ரூபாய்க்கு விற்றது. இதனை நம்பி பலரும் ஆடு வளர்த்தனர். ஆனால் பக்ரீத் பண்டிகைக்கு யாரும் ஆடுவாங்க வராததால் விற்பனை மந்தமாக இருக்கிறது. இதனால் எதிர்காலத்தில் ஆடு வளர்க்கவே மக்கள் யோசிப்பார்கள்

இந்த முறை பக்ரீத் பண்டிகையை சிறப்பாக கொண்டாட முடியாது என்று கூறும் இஸ்லாமியர்கள் ஆட்டுக்கறியை குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும் என 3 பங்காக பிரித்துக் கொடுப்பது வழக்கம்.

ஆனால் கொரோனாவால் வெளியில் சொல்ல முடியாத காரணத்தினால் ஆட்டுக்கறியை பிரித்துக்கொடுக்க முடியாமல் கவலையாக இருக்கும் இஸ்லாமியர்கள் அடுத்த ஆண்டு பண்டிகை சிறப்பாக கொண்டாட அல்லாஹ் அருள் புரிய, பக்ரித் பண்டிகையில் வேண்டுவதாக தெரிவிக்கிறார்கள். கொரோனா நோய் மக்களை மட்டுமல்ல பல கொண்டாட்டங்களையும் விழுங்கியுள்ளது. இதே நிலை நீடித்தால் ஆடு வளர்ப்பு தொழில் என்பது கேள்விக்குறியாகும்.
அதற்கான வாகனச் செலவு இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. இருப்பினும் மக்களிடையே ஆடு வாங்கும் ஆர்வம் குறைந்து இருக்கிறது. காரணம் கொரோனாவால் வருமானம் இன்றி அனைத்து பிரிவு மக்களும் 5 மாதங்களாய் முடங்கியுள்ளனர்.
ALSO READ : குருவிக்காக ஒரு மாதம் இருளில் நடமாடும் கிராம மக்களின் வளர்ச்சிக்கு திமுக ₹ 50 ஆயிரம் நிதியுதவி