ஏப். 15-இல் இருந்து உள்நாட்டு விமான சேவை முன்பதிவு தொடக்கம்: GO AIR நிறுவனம் அறிவிப்பு..!

வெளிநாடுகளுக்கான விமான சேவைக்கான முன்பதிவு மே ஒன்றாம் தேதி தொடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஏப். 15-இல் இருந்து உள்நாட்டு விமான சேவை முன்பதிவு தொடக்கம்: GO AIR நிறுவனம் அறிவிப்பு..!
GO AIR நிறுவனம்
  • Share this:
இந்தியாவில் உள்நாட்டு பயணிகள் விமான சேவைக்கான முன்பதிவு ஏப்ரல் 15-ஆம் தேதி தொடங்கும் என GO AIR விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே உள்ளது. இதனால் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பிரதமர் மோடி ஊரடங்கை இந்தியாவில் அமல்படுத்தினார். இந்த ஊரடங்கின் ஒரு பகுதியாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் உள்நாட்டு பயணிகள் விமான சேவைக்கான முன்பதிவு ஏப்ரல் 15-ஆம் தேதி தொடங்கப்படும் என GO AIR நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் வெளிநாடுகளுக்கான விமான சேவைக்கான முன்பதிவு மே ஒன்றாம் தேதி தொடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.


Also see...









சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: April 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading