உலகிற்கு பின்னலாடை வழங்கிய திருப்பூர் இனி மருத்துவ ஆடை தயாரிப்பு துறையிலும் தனது தடத்தை பதிக்க முனைப்பு காட்ட துவங்கியுள்ளது. அதற்கு ஏற்றார் போல் சுய தகவமைப்பை மேற்கொள்ள ஏற்றுமதியாளர்கள் சங்கம் தனது முன்னெடுப்பை துவங்கியுள்ளது.
திருப்பூர் பின்னலாடை துறை கடந்த ஆண்டு 26 ஆயிரம் கோடி ரூபாய் ஏற்றுமதி மூலம் அந்நிய செலாவணியை ஈட்டி இருந்தது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் திருப்பூரில் இருந்து அனுப்பப்பட்ட சுமார் ஆறாயிரம் கோடி ரூபாய் பின்னலாடைகள் அமெரிக்கா ஐரோப்பா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் துறைமுகங்களில் தேங்கியுள்ளது.
இதனால் அந்தப் பொருட்களின் பணத்தை தர முடியாமல் பின்னலாடை நிறுவனங்கள் தவித்து வருகின்றனர். மேலும் உற்பத்தி செய்யப்பட்ட ஆடைகளும் சுமார் ஐந்தாயிரம் கோடி ரூபாய் அளவில் திருப்பூரில் தேக்கம் அடைந்துள்ளன. இந்த நிலை மாற ஆறு மாதங்கள் வரை ஆகலாம் என திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கணித்துள்ளனர்.
இந்நிலையில் மருத்துவ ஆடை தயாரிப்பு துறையில் திருப்பூருக்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளதாகவும் முக கவசம் பிபிஇ கிட் எனப்படும் முழு கவச ஆடை உள்ளிட்டவற்றை தைத்துத் தர திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் குவிந்து வருவதாகவும் மத்திய அரசு தற்போது மருத்துவ ஆடைகளை ஏற்றுமதி செய்ய தடை விதித்திருந்தாலும் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய மட்டுமே மூன்று மாத காலம் தேவைப்படும் என பின்னலாடை துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க செயலாளர் விஜயகுமார் கூறுகையில், திருப்பூரின் உற்பத்திக்கு தகுந்தார் போல இத்தகைய ஆடை தயாரிக்க ஓவன் துணிகள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது. கிலோ 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட துணி தற்போது 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த ரக துணிகள் உற்பத்தியை மத்திய அரசு ஊக்குவிக்க வேண்டும் எனவும் உள்நாட்டு தேவை பூர்த்தி செய்யப்பட்ட பின் மத்திய அரசு இத்தகைய மருத்துவ ஆடைகளை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும்.
அப்போது உலகளாவிய மருத்துவ ஆடை தயாரிப்பு துறையில் இந்தியாவிற்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளதாகவும் சுமார் 50,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டர்கள் இதன்மூலமாக கிடைக்கப்பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் பின்னலாடை துறையினர் மருத்துவ ஆடைகள் தயாரிப்பதற்கும் தயார் நிலையில் இருக்கவேண்டும் எனவும் கூறினார்.
Also see...
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CoronaVirus, Thiruppur