corona vaccine | 21 கோடி தடுப்பூசிகள் வெளிநாடுகளிலிருந்து கொள்முதல்- மாநில அரசுகளின் திட்டத்தில் உள்ள சிக்கல்கள் என்ன?

கோவிஷீல்டு தடுப்பூசி

உலகெங்கும் கொரோனா தடுப்பூசிக்கான தேவை கடுமையாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் தேவைக்கேற்ப தடுப்பூசி உற்பத்தி செய்வதில் உள்ள சிக்கல்களினால் தட்டுப்பாடுகள் இருந்து வருவதால் மாநில அரசுகள் சில கடந்த 15 நாட்களில் 21 கோடி தடுப்பூசி டோஸ்களுக்கான உலகளாவிய டெண்டர் வெளியிட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    ஸ்டாக்குகள் வந்து சேர 3 முதல் 6 மாதம் வரை காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது கைகூடுமா என்பது பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. உலக அளவில் பெரிய அளவில் வாக்சின் கிராக்கி ஏற்பட்டுள்ளது ஒருபுறம் என்றால், ஏற்கெனவே இந்த தடுப்பூசிகளுக்கான முன் கூட்டியே பெரிய அளவில் அட்வான்ஸ் தொகைச் செலுத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்ட ஆர்டர்களை வாக்சின் தயாரிப்பு நாடுகள் முதலில் அனுப்ப வேண்டிய கட்டாயம் உள்ளது.

    கொரோனா தடுப்பூசிகளுக்காக குளோபல் டெண்டர்கள் குறித்து நியூஸ் 18 இந்த மாநில அதிகாரிகளிடம் பேசியது. அப்போது 18-44 வயதினருக்கு வாக்சின் போடுவதில் தேவை அதிகரிப்பால், மக்களிடமிருந்து அதிக அழுத்தத்ததை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது இதனால் குளோபல் டெண்டர் வெளியிடுகிறோம் என்றார்கள்.

    vaccine
    கோவின் போர்ட்டல்


    அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவது மே 1ம் தேதி முதல் மாநில அரசுகளின் பொறுப்பாகியிருக்கிறது. வாக்சின் உற்பத்தி இன்னும் எத்தனை நாட்களில் எத்தனை வாக்சின் கைவசம் இருக்கும் என்பதெல்லாம் பற்றி மத்திய அரசின் கூற்றுகளுக்கு நம்பகத்தன்மை இல்லை என்றே மாநில அரசுகள் கருதுகின்றன.

    ஹர்ஷவர்தன் அன்று ஜூலை மாதத்துக்குள் 30 கோடி வாக்சின்களும் ஆகஸ்ட்-டிசம்பருக்குள் இந்தியாவுக்கு 216 கோடி தடுப்பூசிகள் கைவசம் இருக்கும் என்று கூறியுள்ளார். இந்நிலையில் ஜூன் மாதம் முடியும் வரை 18-44 வயதுடையோருக்கான தடுப்பூசி டோஸ்கள் 5 கோடி மட்டுமே மாநிலங்களுக்குக் கிடைக்கும் என்று கூறினார் ஹர்ஷ வர்த்தன். இது இந்தியாவில் தயாரிக்கப்படும் 2 நிறுவனங்களினுடையது என்பது குறிப்பிடத்தக்கது.

    உ.பி. மட்டுமே 4 கோடி வாக்சின்களுக்கான டெண்டர் விட்டுள்ளது எனும்போது மாநிலங்கள் மொத்தத்திற்கும் 5 கோடிதான் என்று மத்திய அரசு கூறுவதால் மாநில அரசுகளுக்கு நம்பிக்கை இல்லை, இதனால் உலக டெண்டர்களை விட்டுள்ளது. உ.பி.யை விடவும் அதிகமாக தமிழ்நாடு 5 கோடி டோஸ்களுக்கான டெண்டர் விட்டுள்ளது. ஒடிசா 3.8 கோடி டோஸ்களுக்கான உலக டெண்டர் விட்டுள்ளது. கேரளா 3 கோடி டோஸ்கள், சிறிய மாநிலங்கள் 1-2 கோடி டோஸ்களுக்கு ஆர்டர் செய்துள்ளன. “ஸ்புட்னிக் வி வாக்சின் உள்நாட்டு உற்பத்திதான் இப்போது நம்பிக்கை அளிக்கிறது” என்று மூத்த மாநில அரசு அதிகாரி ஒருவர் நியூஸ் 18-க்கு கூறினார்.

    கொரோனா தடுப்பூசி


    18-44 வயதினருக்கான கொரோனா வாக்சின் தேவையே காரணம்:

    அரசு தரவுகளின்படி 6.5 கோடி பேர் 18-44 வயதினோர் வாக்சினுக்காக பதிவு செய்துள்ளனர். இதில் 10% பேருக்குத்தான் இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வியாழக்கிழமையான இன்று வரை இந்த வயதுப்பிரிவினர் 70 லட்சம் பேர் வரை தடுப்பூசிப் போட்டுக் கொண்டுள்ளனர். ஆகவே இன்னும் 6 கோடி பேர் காத்திருக்கின்றனர். தினமும் 20 லட்சம் பேர் பதிவு செய்கிறார்கள் என்றால் ஜூலை முடிவில் 20 கோடி வாக்சின்கள் தேவைப்படும். அதாவது இந்தப் பிரிவினருக்கு மட்டுமே.

    ஜூலை முடிவில் இந்தியாவின் சீரம் இன்ஸ்டிட்யூட், பாரத் பயோ டெக் இரண்டும் சேர்த்து 13 கோடிதான் தடுப்பூசி அளிக்க முடியும் என்று கூறியுள்ளது. இந்தப் பிரிவில் மட்டுமே அப்போது 7 கோடி வாக்சின்கள் தட்டுப்பாடு ஏற்படும் என்று உ.பி. அரசு அதிகாரி ஒருவர் கூறுகிறார். அதனால்தான் உ.பி. மட்டுமே 4 கோடி வாக்சின் டோஸ்களுக்கு டெண்டர் விட்டுள்ளது.

    18 வயது முதல் 44 வயதினோருக்கு வாக்சின் போடப்படுவது சமீபத்தில் அதிகரித்து வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டுமே 39 லட்சம் பேருக்கு வாக்சின் போடப்பட்டுள்ளது என்றால் இந்த வயதுப்பிரிவினர்கள் 17 லட்சம் பேருக்கு வாக்சின் போடப்பட்டுள்ளது. இதனால் 45+ வயதினருக்கான அவசிய வாக்சின் போடல் நடவடிக்கை கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. ஏனெனில் 2வது டோஸுக்கான இடைவெளியை அரசு 12 முதல் 16 வாரமாக அதிகரித்துள்ளதே. மேலும் 18-44 வயதினருக்கு மத்திய அரசு அனுமதிக்கும் டோஸ்களை மாநில அரசுகள் வேறு பிரிவினருக்கு செலுத்த முடியாது.



    தமிழ்நாட்டில் இதுவரை 18-44 வயதினர் 41, 319 பேருக்கு வாக்சின் போடப்பட்டுள்ளது. கேரளாவில் இதே பிரிவினர் 7,401 பேருக்கு கொரோனா வாக்சின் போடப்பட்டுள்ளது. ஆந்திராவில் 4,605 பேர், தெலங்கானாவில் ஆகக்குறைவாக 500 பேருக்கு மட்டுமே இந்த வயதுப்பிரிவினருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    எல்லா மாநில அரசுகளும் கோவிட் தடுப்பூசிகளுக்காக தாங்களும் அயராது முயற்சி செய்கிறோம் என்று காட்டிக் கொள்வதற்காக போட்டாப்போட்டியில் குளோபல் டெண்டர்களை விடுத்து வருகின்றன. ஹரியாணா ஆர்டர் போட்டவுடன் உடனே பஞ்சாபில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன, இதனையடுத்து, உ.பி., கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா என்று குளோபல் டெண்டர்கள் பெருகின.

    18-44 வயதினருக்கு அதிகம் தடுப்பூசி செலுத்தியதில் டெல்லி, பீகார், ராஜஸ்தான் முன்னிலை வகிக்கின்றன. ராஜஸ்தானில் 10.6 லட்சம் பேருக்கும் பீகாரில் 8.9 லட்சம் பேருக்கும் டெல்லியில் 8.3 லட்சம் பேருக்கும் இந்த வயதுப்பிரிவினருக்கு வாக்சின் செலுத்தப்பட்டுள்ளது. இவர்கள் இன்னும் உலக நாடுகளுக்கு டெண்டர் வெளியிடவில்லை. ஆனால் தற்போது 18-44 இடைப்பட்ட வயதுடையோருக்கு வாக்சினில் தங்களுக்கும் தட்டுப்பாடு இருப்பதாகக் கூறியுள்ளது.

    குளோபல் டெண்டர் கோரிக்கை மாநில அரசுகளுக்கு சாதகமாக நடப்பது மிகவும் கடினமே என்று மாநில அரசு அதிகாரிகள் சிலர் கூறுகின்றனர்.
    Published by:Muthukumar
    First published: