கிளென்மார்க் நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பு மாத்திரை 70 % வெற்றி

கிளென்மார்க் நிறுவனம் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பு மாத்திரை 70 விழுக்காடு நோயாளிகளை விரைந்து குணமாக்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

கிளென்மார்க் நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பு மாத்திரை 70 % வெற்றி
கோப்புப்படம்
  • Share this:
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. பிற நோய்களுக்கான சிகிச்சையில் தற்போது தரப்படுகிற சில மருந்துகள் சோதனை அடிப்படையில் கொரோனா நோயாளிகளுக்கு தரப்படுகின்றன.

இந்த நிலையில், பிரபல மருந்து நிறுவனமான கிளென்மார்க் நிறுவனத்தார், வைரஸ் தொற்றுக்கு எதிராக பேபிபுளூ என்ற மாத்திரையை தயாரித்து வினியோகம் செய்வதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்தது.

இந்த பேபிபுளூ (fabi flu) என்ற மருந்து சோதனை அடிப்படையில் 150 கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டது. வழக்கமான மருந்துகள், சிகிச்சைகளை விட கிளென்மார்க் நிறுவன மருந்து நல்ல பலன் தருவதாகவும், முதல் இரண்டு கட்ட பரிசோதனை வெற்றி கண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


மேலும் படிக்க...

எதிரிகளை மிரட்ட வரும் துருவாஸ்த்ரா ஏவுகணை - வெற்றிகரமாக பரிசோதித்த இந்தியா

இதனால், 3ஆம் கட்ட சோதனை முயற்சியில் அந்நிறுவனம் இறங்கியுள்ளது. இந்தியாவில் கடந்த ஜூன் 20ஆம் தேதி கிளென்மார்க் நிறுவனம் தங்கள் மருந்தை சோதனை அடிப்படையில் தன்னார்வலர்களுக்கு அளித்துள்ளது. 
First published: July 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading