Home /News /coronavirus-latest-news /

விதவிதமான முகக்கவசங்களால் குழப்பமா? முகக்கவசங்களின் பாதுகாப்புத்தன்மை குறித்து அறியவேண்டுமா? இதைப் படியுங்கள்..

விதவிதமான முகக்கவசங்களால் குழப்பமா? முகக்கவசங்களின் பாதுகாப்புத்தன்மை குறித்து அறியவேண்டுமா? இதைப் படியுங்கள்..

N 95 வகை முகக்கவசங்கள்

N 95 வகை முகக்கவசங்கள்

முகக்கவசம் என்ற பெயரில் கைக்குட்டைகள் போன்ற துணிகளை கொண்டு முகத்தை மறைத்து கட்டிக்கொள்வது எந்த பயனும் தராது.

    ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான முகக்கவசங்களை பயன்படுத்தும்பொழுது, இவை அனைத்துமே ஒரேஅளவில் கொரோனா பரவலை தடுக்குமா என்ற கேள்வி எழுகிறது. முகக்கவசங்களின் பாதுகாப்புத்தன்மை குறித்து அமெரிக்காவின் DUKE பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

    பெரும்பாலானோரின் கருத்துப்படியே N95 வகை முகக்கவசங்கள் திரவத்துளிகளிடம் இருந்து கூடுதல் பாதுகாப்பு வழங்கக்கூடியது என DUKE ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். N95 முகக்கவசங்களின் மூலம் திரவத்துளிகள் பரவ புள்ளி ஒரு விழுக்காட்டுக்கும் குறைவான வாய்ப்புகளே உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவப் பணியாளர்கள் பயன்படுத்த இதுவே சிறந்த முகக்கவசம் ஆகும்.

    அடுத்ததாக மூன்றடுக்குகளை கொண்டுள்ள ஒரு முறை மட்டுமே பயன்படுத்தத்தக்க அறுவை சிகிச்சைக்கான முகக்கவசங்கள். இத்தகைய முகக்கவசங்கள் தொற்று பரவலில் இருந்து அணிந்திருப்போரை காக்கும் என்றாலும், N95 அளவுக்கு முழுமையாக முகத்தோடு பொருந்தாது என்பதால் தொற்று பரவ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    துணியாலான மூன்றடுக்கு முகக்கவசங்களில் 2 அடுக்குகள் காட்டன் துணியாலும், ஒரு அடுக்கு பாலிபுரோப்லீன் வகை துணியாலும் தயாரிக்கப்படுகிறது.  பாலிபுரோப்லீன் என்பது ஒருவகையான பிளாஸ்டிக் தன்மையுடையது என்பதால் திரவத்துளிகளை தடுத்து காக்கிறது.

    இரண்டடுக்கு முகக்கவசங்கள் சில பாலிபுரோப்லீன் வகை துணியையும், செயற்கை இழையாலான துணியையும் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. இவை 35 விழுக்காடு பாதுகாப்பானது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    இரண்டடுக்கு காட்டன் துணியாலான முகக்கவசங்கள் சில, பல கயிறுகள் உடையதாக தயாரிக்கப்படுகின்றன. அதிகளவிலான கயிறுகள் முகத்தை முழுமையாக, இறுக்கமாக மூடிக்கொள்ள உதவுகின்றன.

    இரண்டடுக்கு காட்டன் துணியிலான முகக்கவசங்கள் இருபக்க கயிறுகளுடனும் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இவற்றால் முகத்தை முழுமையாக மூடிக்கொள்ள இயலாது. வால்வுடன் கூடிய N95 வகை முகக்கவசங்கள் கூடுதல் தடுப்பம்சங்களை கொண்டிருந்தாலும், துணியாலான முகக்கவசங்கள் அளவுக்கு திறன்கொண்டவையாக இல்லை என கருதப்படுகிறது.

    வீட்டில் தயாரிக்கக்கூடிய கூம்பு வடிவிலான இரண்டடுக்கு காட்டன் முகக்கவசங்கள், மூக்கு மற்றும் வாயை முழுயைமாக மூடிக்கொள்ள வழிவகுக்கின்றன. ஓரடுக்கு பாலிஸ்டர் முகக்கவசங்கள், ஓரடுக்கு மற்றும் ஈரடுக்கு காட்டன் முகக்கவசங்களை விட சிறந்ததாக கருதப்படுகிறது.  ஈரடுக்கு காட்டன் முகக்கவசங்களை விட ஓரடுக்கு முகக்கவசங்கள் சிறப்பானதாக உள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது.

    இதில் கயிறுகளை கைகளால் கட்டிக்கொள்ளும்படியான முகக்கவசங்கள் ஆபத்தானவை என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.முகக்கவசம் என்ற பெயரில் கைக்குட்டைகள் போன்ற துணிகளை கொண்டு முகத்தை மறைத்து கட்டிக்கொள்வது எந்த பயனும் தராது.

    மேலும் படிக்க...இன்று திறக்கப்படுகிறது சபரிமலை ஐயப்பன் கோவில் நடை: பக்தர்கள் தரிசனத்துக்கு தடை நீடிப்பு..



    துணியால் முகக்கவசம் அணிவது, முகக்கவசம் அணியாமல் இருப்பதை விட ஆபத்தானதாகும். இப்படி துணியால் முகத்தை மறைத்துக் கொண்டு பேசும் போது அதிகளவிலான நீர்த்துளிகள் வெளியாகும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: CoronaVirus, Make Your Own Mask

    அடுத்த செய்தி