கொரோனா வைரஸ் தாக்குதல்: தாடி வைத்திருக்கும் ஆண்களுக்கு ஓர் எச்சரிக்கை!

உலக சுகாதார நிறுவன அறிக்கையின் அடிப்படையில் சர்வதேச அளவில் சுமார் 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரொனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்குதல்: தாடி வைத்திருக்கும் ஆண்களுக்கு ஓர் எச்சரிக்கை!
தாடி விளக்கம்
  • News18
  • Last Updated: February 28, 2020, 12:03 PM IST
  • Share this:
ஸ்டைலாக, நீளமாக தாடி வைத்திருப்பது உங்களுக்குப் பிடித்திருக்கலாம். ஆனால், க்ளீன் ஷேவ் செய்வது பல வைரஸ் தாக்குதல்களில் இருந்து உங்களைக் காப்பாற்றும் எனத் தெரியுமா?

குறிப்பாக, கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க ஆண்கள் அனைவரும் க்ளீன் ஷேவ் முறையைப் பின்பற்றுவது சிறப்பானதாம். காரணம், வைரஸ் தாக்குதல்களில் இருந்து தப்பிக்க இன்று உலக மக்கள் அனைவரும் முகமூடி அணிந்து சுற்றிக்கொண்டிருக்கிறோம். அப்படி, முகமூடி அணியும் போது ஆண்களின் அடர்த்தியான தாடி, மீசை போன்றவை பாதுகாக்கும் முகமுடியையும் மீறி வைரஸ் உடலுக்குள் புக வழிவகை செய்கிறதாம்.

இதுகுறித்த ஆய்வை அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்புப் பிரிவுத் துறையினர் மேற்கொண்டுள்ளனர். உலக சுகாதார நிறுவன அறிக்கையின் அடிப்படையில் சர்வதேச அளவில் சுமார் 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரொனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இத்தகைய சூழலில் பலகட்ட தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் மேற்கொண்டு வந்தாலும் அதனுடன் க்ளீன் ஷேவ் செய்துகொள்வதை ஆண்கள் சிறிது காலத்துக்கு வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என அந்த ஆராய்ச்சி மையத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் பார்க்க: பாகிஸ்தானுக்குள் நுழைந்த கொரோனா வைரஸ்... நிலைமை கட்டுக்குள் இருப்பதாக அரசு அறிவிப்பு!
First published: February 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading