Corona Vaccine : இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகளை போட்டுக்கொண்டு உலகின் கவனத்தை ஈர்த்த பிரதமர்!

கொரோனா தடுப்பூசி

தனது 66 ஆவது வயதில் இரு வெவ்வேறு தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு கவனத்தை ஈர்த்துள்ளார்.

  • Share this:
    முதலில் அஸ்ட்ரா ஜெனேகா, இரண்டாவது மாடர்னா என்ற 2 வெவ்வேறு கொரோனா தடுப்பூசிகளை ஜெர்மனி பெண் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் செலுத்திக்கொண்டு உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

    கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக உலகமெங்கும் பல்வேறு தடுப்பூசிகள் வந்துள்ளன. எந்தவொரு தடுப்பூசியையும் ஒருவர் போட்டுக்கொள்கிறபோது, குறிப்பிட்ட கால இடைவெளியில் இரண்டாவது டோஸ் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில், ஒருவகை முதல் டோஸ் தடுப்பூசியையும், இரண்டாவது டோஸ் வேறொரு தடுப்பூசியையும் போடுகிறபோது, என்ன ஆகும் என்பது பற்றிய விவாதங்கள் நடந்து வருகின்றன. இதுபற்றிய ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து தங்களின் கருத்துகளை கூறி வருகின்றனர்.

    ஏஞ்சலா மெர்கல்


    இந்நிலையில், உலகின் செல்வாக்கு மிகுந்த தலைவர்களில் ஒருவராக கருதப்படும் ஜெர்மனி பெண் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், தனது 66 ஆவது வயதில் இரு வெவ்வேறு தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு கவனத்தை ஈர்த்துள்ளார். இவர் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் கூட்டாக உருவாக்கியுள்ள தடுப்பூசியை கடந்த ஏப்ரல் மாதத்தில் முதல் டோஸ் தடுப்பூசியாக செலுத்திக்கொண்டார். இந்த தடுப்பூசி இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து வழங்கப்படுகிறது.

    ஏஞ்சலா மெர்க்கல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசியை செலுத்த ஜெர்மனி அதிகாரிகள் பரிந்துரை செய்த நிலையில்தான் அவர் இந்த தடுப்பூசியை போட்டுக்கொண்டார். தற்போது அவர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியாக அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளார். இதை அவரது செய்தி தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

    இந்நிலையில், இத்தாலி பிரதமர் மரியோ டிராகியும், முதலில் ஒரு கொரோனா தடுப்பூசியையும், இரண்டாவது மற்றொரு தடுப்பூசியையும் போட்டுக் கொண்டார். இவரும் முதலில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ரா ஜெனேகா கூட்டாக உருவாக்கிய தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். பின்னர், இரண்டாவது டோஸ் தடுப்பூசியாக இவர் அமெரிக்காவின் பைசர் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகின.

    Must Read : மூன்று மாநிலங்களில் அதிகம் காணப்படும் டெல்டா பிளஸ் வைரஸ்: கவலையளிக்கக் கூடியதாக மத்திய அரசு அறிவிப்பு!

    சில நாடுகள் குறிப்பிட்ட தடுப்பூசியின் வினியோக பிரச்சினைகள் காரணமாக இரு வெவ்வேறு தடுப்பூசிகளை போட்டு, கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு மேம்படுவதை கவனித்து வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இந்தியாவிலும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் என இருவேரு தடுப்பூசி போடுவதால் பாதிப்புகள் இல்லை என தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: