"மீண்டும் வருகிறோம்" -17 நாட்களுக்கு பிறகு டெல்லியில் இருந்து புறப்பட்ட ஜெர்மன் மருத்துவக்குழு

ஜெர்மன் மருத்துவக் குழு

ஆக்சிஜன் பிளாண்ட், வென்டிலேட்டர் உதவிகளுடன், டெல்லியில் தங்கி மெடிக்கல் உதவியும் செய்த ஜெர்மன் மருத்துவக்குழு 17 நாட்களுக்குப் பிறகு சொந்த நாட்டுக்கு திரும்பியுள்ளனர்.

  • Share this:
இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸின் 2வது அலை நாட்டின் சுகாதார கட்டமைப்பை முழுமையாக சிதைத்துள்ளது. டெல்லி உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்கள் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் பரிதவித்து வருகின்றன. மருத்துவமனைகளில் நாளுக்கு நாள் கூட்டம் அலைமோதுவது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பலர் சிகிச்சை பெறுவதற்கு இடம் கிடைக்காமல் மருத்துவமனை வாசல்கள் மற்றும் சாலைகளிலேயே தஞ்சமடைந்துள்ளனர்.

மேலும், சிலர் வாகனங்களிலேயே சிகிச்சைக்கு இடம் கேட்டு காத்திருக்கின்றனர். படுக்கை வசதி பற்றாக்குறை ஒருபுறம் என்றால், உயிர்காக்கும் ஆக்சிஜன் பற்றாக்குறை மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பலரும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழக்க நேரிட்டது. உறவினர்களும், குடும்ப உறுப்பினர்களும் ஆக்சிஜனுக்காக பல நூறு கிலோ மீட்டர் சிலிண்டர்களை தூக்கிச்சென்று தொழிற்சாலைகள் முன்பு காத்திருக்க வேண்டிய அவலநிலையும் ஏற்பட்டுள்ளது.

இன்னொருபுறம் இறந்தவர்களை முறையாக இறுச்சடங்கு செய்வதற்கு கூட சுடுகாட்டில் இடமில்லை. டெல்லியில் இறந்தவர்களை எரிப்பதற்கு ஏற்பட்டுள்ள விறகு பற்றாக்குறை, நாட்டின் அவலத்தை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது. உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் கங்கை ஆற்றில் காரையோரங்களில் நூற்றுக்கணக்கான சடலங்கள் மண்ணில் புதைக்கப்பட்டும், ஆற்றில் தூக்கிவிசப்பட்டும் உள்ளன. அந்த உடல்களை நாய் மற்றும் பறவைகள் கடித்து குதறுகின்றன.

 


இத்தகைய கொடூர காட்சிகளை கண்ட உலக நாடுகள், இந்தியாவில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்யத் தொடங்கினர். அமெரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் ஆக்சிஜன், வென்டிலேட்டர்கள் உள்ளிட்டவைகளை அனுப்பி வைத்தனர். ஜெர்மனி, ஆக்சிஜன் மற்றும் வென்டிலேட்டர்களை அனுப்பி வைத்ததுடன், ராணுவ மருத்துவக் குழு ஒன்றையும் அனுப்பியது.

Also Read:உங்களுக்கு கொரோனா பாசிடிவா..? வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறீர்களா..? விரைவில் குணமடைய நீங்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்..!

இந்தியா வந்த அந்தக் குழு தலைநகர் டெல்லியில் தங்கி கடந்த 17 நாட்களாக தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தனர். இந்நிலையில், மே18 ஆம் தேதி இரவு சொந்த நாட்டுக்கு அவர்கள் திரும்பினர். இந்த தகவலை இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் வால்டர் ஜெ.லிண்டர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு வந்த ஜெர்மனி குழு, நிலைமை சரியானவுடன் மீண்டும் ஒருமுறை இங்கு வருவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜெர்மனியில் கொண்டுவரப்பட்ட ஆக்சிஜன் பிளாண்டை டெல்லியில் உள்ள சர்ர்தார் வல்லபாய் படேல் டி.ஆர்.டி.ஓ கொரோனா மருத்துவமனையில் அந்நாட்டு ராணுவ குழுவினர் அமைத்துக் கொடுத்தனர். இதனை வால்டர் ஜெ.லிண்டர் சிறப்பு கவனம் எடுத்து கவனித்துக்கொண்டார். அதுமட்டுமல்லாது, 176 வென்டிலேட்டர்களும் ஜெர்மனி கொடுத்துள்ளது. இதனிடையே, டெல்லியில் முழு ஊரட்ங்கு மே 24 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Tamilmalar Natarajan
First published: