கொரோனா நோயாளிகளை எளிதில் அடையாளம் காணும் நாய்கள்

குற்றவாளிகளை மட்டுமல்ல, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களையும் நாய்களால் கண்டறிய முடியும் என்கிறது ஓர் ஆய்வு

கொரோனா நோயாளிகளை எளிதில் அடையாளம் காணும் நாய்கள்
(Image: Reuters)
  • News18
  • Last Updated: July 28, 2020, 7:22 AM IST
  • Share this:
உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கும் பணி ஒரு பக்கமும், தடுப்பு மருந்து பரிசோதனை மற்றொரு புறமும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வாசனையை கண்டறிவதில், மனிதர்களைவிட 10 ஆயிரம் மடங்கு அதிக திறன்பெற்றவை நாய்கள் என்கின்றனர் ஆய்வாளர்கள். புற்றுநோய், மலேரியா, வைரஸ் தொற்றுகளை கண்டறிய ஏற்கெனவே நாய்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், குற்றவாளிகளையும், வெடிபொருட்களையும் கண்டறிந்து காவல் துறைக்கு உதவிவரும் நாய்களால், கொரோனா வைரஸ் நோயாளிகளையும் கண்டறிய முடியுமா என்பது குறித்து ஆய்வு நடத்தியது ஜெர்மனியில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக் கழகம். இதற்கு ஜெர்மனி ராணுவத்தில் பணியாற்றிவரும் 8 நாய்களுக்கு ஒரு வார காலம் பயிற்சி அளித்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்படாதவர்கள் என ஆயிரம் பேரின் உமிழ்நீர் மாதிரிகளை இந்த நாய்களை மோப்பம் பிடிக்க வைத்தனர்.


இதில், கொரோனா நோயாளிகளை 94 சதவீதம் அளவுக்கு துல்லியமாக நாய்கள் அடையாளம் கண்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
படிக்க: இணையத் தாக்குதல்களை நிறுத்துங்கள் - விஜயலட்சுமி விவகாரத்தில் காயத்ரி ரகுராம் காட்டம்படிக்க: மீண்டும் விஜய் டிவியின் புதிய சீரியலில் நடிக்கும் ஆல்யா மானசா


படிக்க: முருகனுக்கு ஒரு நியாயம்? வள்ளிக்கு ஒரு நியாயமா? மதுரை ஆட்சியரிடம் புகார்

நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட நபருக்கு மெட்டபாலிசம், அதாவது வளர்சிதை மாற்றம் முற்றிலும் மாறுபடும் என்பதால், நாய்களால் எளிதில் கண்டறிய முடிவதாக ஆராய்ச்சியை மேற்கொண்ட பேராசிரியர் மாரேன் வோன் கோக்ரிச் தெரிவித்துள்ளார்.

கொரோனா மற்றும் பிற காய்ச்சல்களை வேறுபடுத்திப் பார்க்கும் வகையில், நாய்களுக்கு அடுத்தகட்டமாக பயிற்சி அளிக்க உள்ளதாக வோன் கோக்ரிச் கூறினார். இதனிடையே, தென்னமெரிக்க நாடான சிலியில் கொரோனா நோயாளிகளை அடையாளம் காண்பதற்காக நாய்களுக்கு ஒரு மாதமாக பயிற்சி அளிக்கப்படுகிறது.

போதைப் பொருட்கள், வெடிபொருட்கள் மற்றும் மாயமான நபர்களை கண்டறியும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட 4 நாய்களுக்கு இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த நாய்களை, அடுத்த மாதத்தில் பொது இடங்களில் நிறுத்தி கொரோனா நோயாளிகளை அடையாளம் காண உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
First published: July 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading