காய்ச்சல் வந்தால் அச்சப்பட வேண்டாம்:  கடலூர் மாவட்ட கொரோனா சிறப்பு அதிகாரி பேட்டி..

கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு சார்பில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள கொரோனா சிறப்பு அதிகாரியாக வேளாண்மைத்துறை செயலளர் ககன்தீப்சிங்பேடி அவர்களை நியமனம் செய்தது 

காய்ச்சல் வந்தால் அச்சப்பட வேண்டாம்:  கடலூர் மாவட்ட கொரோனா சிறப்பு அதிகாரி பேட்டி..
கொரோனா சிறப்பு அதிகாரி ககன்தீப்சிங் பேடி
  • Share this:
கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு சார்பில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள கொரோனா சிறப்பு அதிகாரியாக வேளாண்மைத்துறை செயலளர் ககன்தீப்சிங்பேடி அவர்களை நியமனம் செய்தது 

இந்த நிலையில் கடலூர் மாவட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து 3 நாட்களாக சென்னையில் இருந்து வீடியோ காட்சி மூலம் ஆட்சியர் அன்புசெல்வன் அவர்களிடம் ஆலோசனை நடத்தி வந்த அவர் இன்று கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்த பகுதிகளில் தடுக்கு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

கடலூர் -புதுவை எல்லையான சின்னகங்கனாங்குப்பம் பகுதியில் வாகன சோதனை சாவடி மையங்களை ஆய்வு மேற்கொண்ட அவர் தொடர்ந்து கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளான ஆல்பேட்டை,திருப்பாதிரிபுயூர்,வெள்ளிமோட்டான் தெரு,தண்டபானி நகர் ஆகிய பகுகளை ஆட்சியர் அன்புசெல்வன் உடன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்


பொதுமக்களுக்கு தொற்று நோய் தொடர்பாக முன்பு காய்ச்சல்,  இருமல், மூச்சு திணறல் மற்றும் உடல் பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனை, சுகாதார வளாகம் போன்றவற்றிற்கு நேரில் சென்று தெரிவிக்க வேண்டும். பின்னர் தொற்றுநோய் உள்ளதா ?என்பதனை உறுதி செய்ய உமிழ் நீர் பரிசோதனை எடுத்துக் கொண்டு தங்களைத் தானே பொதுமக்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும் பரிசோதனை மேற்கொண்ட நபர்கள் கடைசியாக பத்து நாட்கள் யார் யாருடன் தொடர்பில் இருந்தார்கள்? எங்கு சென்றார்கள் என்பது குறித்து முழு விவரத்தை அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். இதனை தொடர்ந்து அரசு அதிகாரிகள் பரிசோதனை செய்து கொண்ட நபர்கள் தெரிவித்த அனைத்து விபரங்களையும் அறிந்து கொண்டு உடனடியாக அந்த நபர்களிடம் நேரில் சென்று உடல்நிலை பாதிப்பு உள்ளதா ? என்பதனை சோதனை செய்ய வேண்டும். மேலும் ஏதேனும் பாதிப்பு இருந்ததாக கூறினால் உடனடியாக உமிழ்நீர் பரிசோதனை செய்ய வேண்டும் என அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கடலூர் மாவட்டத்தில் தொற்றுநோய் பாதிக்கப்பட்டதாக பல்வேறு பகுதிகளை தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்து வருகிறோம்.
கடலூர் மாவட்டத்தில் தொற்றுநோய் பாதிக்கப்படும் நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 10 மருத்துவமனை தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில் முதலமைச்சர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டத்தில் ஒரு மருத்துவமனையில் 60 முதல் 70 சதவீதம் தொற்று நோய் பாதிக்கப்பட்டவர்கள் நிரம்பி விட்டால் உடனடியாக அடுத்த மருத்துவமனையை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் . பின்னர் எண்ணிக்கை கூடிக் கொண்டு சென்றால் உடனடியாக எந்த தொய்வும் இன்றி சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொற்றுநோய் ஏற்பட்டால் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். மேலும் தொற்று நோய் ஏற்பட்டாலும் முதற்கட்டத்தில் உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு சரி செய்து கொள்ளலாம்.
First published: June 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading