Corona virus | ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்: மத்தியபிரதேச அரசு

Corona virus | ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்: மத்தியபிரதேச அரசு

கோப்புப் படம்

இந்தியாவில் கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவிற்கு, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மீண்டும் 60,000ஐ நெருங்கியுள்ளது.

  • Share this:
    மத்திய, மாநில அரசுகளின் தீவிர நடவடிக்கைகளுக்கு மத்தியிலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி, 5 மாதங்களில் இல்லாத உச்சமாக நேற்று ஒரே நாளில் 59,118 பேருக்கு புதியதாக தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து 32,987 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 257 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

    அதிகபட்சமாக, மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 35,952 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. நாட்டின் மொத்த பாதிப்பில் 80 சதவிகிதம், கேரளா, பஞ்சாப் மற்றும் கர்நாடகா போன்ற 6 மாநிலங்களில் இருந்து மட்டுமே பதிவாகியுள்ளது.

    மகாராஷ்டிராவின் புனேவில் தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. மத்தியபிரதேசத்தில் ரத்லம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் படிக்க...Coronavirus | தஞ்சாவூரில் மேலும் ஒரு பள்ளியில் கொரோனா பாதிப்பு...

    ராஜஸ்தான் மாநிலத்தில் ஹோலி பண்டிகையை கொண்டாட தடை விதிக்கப்பட்டு உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில், ஏப்ரம் 10ம் தேதி வரை அனைத்து அருங்காட்சியகங்களையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: