டெல்லியில் இன்று முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிப்பு

டெல்லியில் இன்று முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிப்பு

அரவிந்த் கெஜ்ரிவால்

நாடு முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், டெல்லியில் இன்று முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கை அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

 • Share this:
  நாடு முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், டெல்லியில் இன்று முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கை அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

  டெல்லியில் நேற்று ஒரே நாளில் 25,462 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. நோய் தொற்றால் அங்கே 161 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும், புதிய கட்டுப்பாடுகளையும் விதிப்பது பற்றி அம்மாநில அரசு ஆலோசனை நடத்தியது.

  அதனைத் தொடர்ந்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், “டெல்லி இப்போது கொரோனா வைரசின் நான்காவது அலையை எதிர்கொண்டு வருகிறது. தினமும் 25 ஆயிரம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு வருகின்றது. புதிய பாதிப்பு இதே நிலையில் நீடித்தால், சுகாதார கட்டமைப்பு சீர்குலையும் அபாயம் உள்ளது. மருத்துவமனைகளில் படுக்கைகள் குறைவாகவே இருக்கின்றன.

  ஆகவே, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இன்று இரவு 10 மணி முதல் வரும் ஏப்ரல் 26 (அடுத்த திங்கட்கிழமை) காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

  அதன்படி, அத்தியாவசிய சேவைகள், உணவு சேவைகள், மருத்துவ சேவைகள் தொடர்ந்து நடைபெறும். திருமண நிகழ்ச்சியில் 50 பேர் வரை மட்டும் பங்கேற்க அனுமதிக்கப்படும். இதற்காக தனித்தனியாக அனுமதி அட்டைகள் வழங்கப்படும். வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான விரிவான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.

  Must Read : இரவு ஊரடங்கு நாட்களில் பேருந்து போக்குவரத்தில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள்

   

  கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அறிவிதுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: