ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் இயங்க அனுமதி - முதல்வர் பழனிசாமி

தமிழ்நாடு முழுவதும் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் செயல்பட அனுமதி வழங்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் இயங்க அனுமதி - முதல்வர் பழனிசாமி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
  • Share this:
அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, வரும் 10-ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் செயல்பட அனுமதி வழங்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, உலகம் முழுவதும் மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும், முகக் கவசம் அணீயவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 4 மாதங்களாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, பெரும்பாலான தொழில்கள், சுற்றுலா தலங்கள், பொழுதுப்போக்கு இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் கூடுவது தவிர்க்கப்பட்டுள்ளது.


எனினும், அண்மைக்காலமாக சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி,  வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ளன. உடற்பயிற்சி கூடங்களை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. சிறிய கோவில்களில் பக்தர்கள் வழிபாட்டுக்காக திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளையும் திறக்க முதலமைச்சர் பழனிசாமி அனுமதி வழங்கியுள்ளார்.
First published: August 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading