ஃபிரான்ஸில் முக கவசத்தை மறந்ததால் பதறிய அமைச்சர்

ஃபிரான்ஸில் முக கவசத்தை மறந்ததால் அமைச்சர் ஒருவர் பதறிய காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

ஃபிரான்ஸில் முக கவசத்தை மறந்ததால் பதறிய அமைச்சர்
ஃபிரான்ஸின் தொழில்துறை அமைச்சரான ஏக்னஸ் பன்னியர் ருனாச்சர்
  • Share this:
கொரோனா பரவலில் இருந்து தற்காத்துக் கொள்ள என்னதான் நாம் எச்சரிக்கையாக இருந்தாலும் அவ்வப்போது முக கவசத்தை மறந்து விட்டு வருவதும் பின் திடீரென்று நினைவுக்கு வந்து அதனை அணிவதும் இயல்பானதாகி விட்டது.

ஃபிரான்ஸின் தொழில்துறை அமைச்சரான ஏக்னஸ் பன்னியர் ருனாச்சர் (Agnès Pannier-Runacher) நேற்று நடைபெற்ற பாஸ்டைல் தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தார்.

அப்போது காரிலிருந்து இயல்பாக இறங்கிய அவர், முக கவசத்தை மறந்து விட்டதை உணர்ந்து பதறி தன் காரை நோக்கி ஓடினார்.


Also read... பழைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமலேயே போகலாம் - WHO எச்சரிக்கை

பின்னர் அதிகாரிகள் அவரிடம் அதுகுறித்து விசாரித்து மாற்று முக கவசத்தை வழங்கிய பின்னரே நிம்மதியடைந்தார். மாஸ்க்கை அணியும் வரை ஏக்னஸ் தன் கைகளால் முகத்தை மறைத்துக் கொண்டிருந்தது கொரோனா குறித்த அச்சத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது.
First published: July 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading