பெண்கள் சுய உதவிக்குழுக்களுக்கு ₹20 லட்சம் வரையில் கடன்..!- நிதியமைச்சர்

ஜன் தன் கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு மாதம் 500 ரூபாய் அடுத்த 3 மாதங்களுக்கு 1,500 ரூபாய் மத்திய அரசின் சார்பில் நேரடியாக வழங்கப்படும்.

பெண்கள் சுய உதவிக்குழுக்களுக்கு ₹20 லட்சம் வரையில் கடன்..!- நிதியமைச்சர்
மகளிர் சுய உதவிக்குழுவினர் (மாதிரிப்படம்)
  • Share this:
பெண்கள் சுய உதவிக்குழுவினருக்கு வழங்கப்படும் உத்தரவாதமில்லா கடன் தொகை 20 லட்சம் ரூபாய் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தாக்கத்திலிருக்கும் மக்களுக்கு உதவும் வகையில் இன்று நிதியமைச்சர் வெளியிட்ட சிறப்புப் பொருளாதார திட்டங்களில் பெண்கள் சார்ந்தும் பல நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் பெண்கள் சுய உதவிக்குழுவினருக்கு தற்போது வழக்கத்தில் இருக்கும் உத்தரவாதமில்லாத கடன் தொகை 10 லட்ச ரூபாயை 20 லட்சம் ரூபாய் ஆக உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் 63 லட்சம் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 7 கோடி பேர் பயனடைய உள்ளார்கள்.


மேலும், ஜன் தன் கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு மாதம் 500 ரூபாய் அடுத்த 3 மாதங்களுக்கு 1,500 ரூபாய் மத்திய அரசின் சார்பில் நேரடியாக வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் 20 கோடி பெண்கள் நேரிடையாகப் பயன் அடைகின்றனர். இதேபோல், பெண்கள் உஜ்ஜவாலா யோஜனா திட்டத்தின் கீழ் அடுத்த மூன்று மாதங்களுக்கும் இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும். இதன் மூலம் நாட்டில் உள்ள 8.3 கோடி மக்கள் பயனடைய உள்ளார்கள்.

வயதான பெண்கள் மற்றும் விதவைப் பெண்களுக்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு 1,000 ரூபாய் இரண்டு தவணை முறைகளில் வழங்கப்படும். இதன் மூலம் பயனடைவோரின் எண்ணிக்கை 3 கோடி.

மேலும் பார்க்க: கொரோனா: மருத்துவத்துறை சார்ந்த அத்தனைப் பணியாளர்களுக்கும் ₹50 லட்சம் காப்பீடுசீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTubeFirst published: March 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்