கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவலர்கள், அரசு ஊழியர்கள் , துப்புரவு தொழிலாளர் என 2000 பேருக்கு கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இலவச மூலிகை டீயை அன்னூர் புளியம்பட்டியை சேர்ந்த ஜக்குபாய் வழங்கி வருகின்றார்.
கோவை அன்னூர் புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாஸ்டர் ஜக்குபாய். திருமண விழாக்களில் மூலிகை டீ ஆர்டர் எடுத்து விநியோகம் தொழில் செய்து வருகின்றார். 144 தடை உத்தரவு காரணமாக திருமணங்கள், பொது நிகழ்வுகள் என எதுவும் இல்லாத நிலையில் , கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக பணியாற்றும் அரசு ஊழியர்கள் , காவலர்கள் என அனைவருக்கும் இலவசமாக மூலிகை டீயை ஜக்குபாய் வழங்கி வருகின்றார்.
அன்னூரில் இருந்து தினமும் காலை 2000 பேருக்கான மூலிகை டீ யுடன் கிளம்பி வரும் மாஸ்டர் ஜக்குபாய் , வழியில் பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்கள் , அரசு ஊழியர்கள் என அனைவருக்கும் மூலிகை டீ வழங்கி வருகின்றார். இந்த மூலிகை டீ தயாரிக்க தினமும் 5000 ரூபாய் செலவாகின்றது எனவும் இந்த டீ யில் கோவக்காய், நெல்லிக்காய், மாங்காய், சுக்கு, மிளகு, திப்பிலி என மொத்தம் 82 விதமான பொருட்கள் சேர்க்கப்படுவதாகவும் , இது மக்களுக்கு புத்துணர்வை கொடுப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் உடலுக்கு கொடுக்கும் எனக் கூறுகிறார்.
மேலும் இரவு பகலாக பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு இது தெம்பளிக்கும் என மாஸ்டர் ஜக்குபாய் தெரிவிக்கின்றார். அரசு அலுவலர்கள், காவலர்கள் மட்டும் இன்றி அரசு அலுவலகங்களுக்கு வந்து செல்லும் பொது மக்களுக்கும் இலவசமாக இந்த மூலிகை டீ வழங்கப்படுகின்றது. வருவாய் நோக்கமின்றி ஜக்குபாய் இலவசமாக டீ வழங்கி வருவதை பொது மக்களும் பாராட்டி வருகின்றனர்.
பேக்கரி, டீ கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் எந்த வித வியாபார நோக்கமும் இல்லாமல் டீ விநியோகத்தை மாஸ்டர் ஜக்குபாய் செய்து வருகின்றார். திருமண ஆர்டர்களுக்கு செல்வதால் கையிருப்பில் டீ தயாரிப்பதற்கான பொருட்கள் நிறைய இருப்பதாகவும் , தன்னிடம் இருக்கும் மூலிகை பொருட்களை கொண்டே இன்னும் ஒரு வாரத்திற்கு மக்களுக்கு இலவசமாக மூலிகை டீ கொடுக்க முடியும் என மாஸ்டர் ஜக்குபாய் கூறுகிறார்.
கொரோனா அச்சத்தால் மக்கள் வீடுகளில் முடங்கி இருக்கும் நிலையில் , நோய் தடுப்பு பணிகளுக்காக ஈடுபடுபவர்களை கவனத்தில் கொண்டு தினமும் 2000 பேருக்கு இலவசமாக மூலிகை டீ வழங்கி அவர்களின் உடல் நலனை காப்பதில் மாஸ்டர் ஜக்குபாய் அக்கறை காட்டி வருகின்றார்.
Also see...
இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow
News18Tamil.com @
Facebook,
Twitter,
Instagram,
Sharechat,
Helo,
WhatsApp,
Telegram,
TikTok,
YouTube
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.