குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச மாஸ்க் - கொள்முதல் செய்ய கமிட்டி அமைப்பு

தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டை தாரார்களுக்கும் இலவசமாக முகக்கவசம் வழங்க அரசு முடிவெடுத்துள்ளது. இந்த முகக்கவசங்களை கொள்முதல் செய்வதற்கான கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச மாஸ்க் - கொள்முதல் செய்ய கமிட்டி அமைப்பு
முகக்கவசம் (கோப்புப்படம்)
  • Share this:
தமிழகத்தில் நாளுக்கு நாள் உச்சத்தைத் தொட்டு வரும் கொரோனா தொற்று நோய்ப் பரவலைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மக்கள் வெளியே வரும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், அணியாவிட்டால் அபராதம் வசூலித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டை தாரார்களுக்கும் இலவசமாக முகக்கவசம் வழங்க அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி, மொத்தம் உள்ள 2,08,23,076 குடும்ப அட்டைகளில், 6,74,15,899 குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு மாஸ்க் என்ற அடிப்படையில், 13,48,31,798 மறு பயன்பாடு துணி மாஸ்க்குகள் வழங்கப்பட உள்ளது.

Also see:இந்த முகக்கவசங்களை கொள்முதல் செய்வதற்கான கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. வருவாய் நிர்வாக ஆணையாளர், பேரிடர் மேலாண்மை இயக்குநர், பொது சுகாதாரத்துறை இயக்குனர், நிதித்துறை துணைச் செயலாளர் உள்ளிட்ட ஏழு பேர் அடங்கிய கமிட்டி மாஸ்க்குகளை உரிய விலையில் கொள்முதல் செய்வதற்கான சாத்தியங்களை ஆராய்ந்து இறுதி செய்து அரசுக்கு சமர்ப்பிக்கும். அதனைத் தொடர்ந்து மாஸ்க்குகள் கொள்முதல் செய்யப்பட்டு ரேஷன் கடைகள் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விநியோகம் செய்யப்பட உள்ளது.

First published: June 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading