செப்டம்பரில் கொரோனா 4வது அலைக்கு வாய்ப்பு: எச்சரிக்கும் அறிவியல் ஆலோசகர்!

மாதிரிப் படம்

அரசின் அறிவியல் ஆலோசகரும் பேராசிரியருமான ஜீயன் பிரான்சிஸ் டெல்பிரைசி கூறுகையில், “ பிரான்ஸில் கொரோனா 4வது அலைக்கும் வாய்ப்பு இருப்பதாகதெரிகிறது. எனினும் தடுப்பூசி காரணமாக,  மற்ற மூன்று அலைகளை விட 4அது அலையில் பாதிப்பு குறைவாகவே இருக்கக் கூடும்” என்று குறிப்பிட்டுள்ளார். 

 • Share this:
  பிரான்ஸ் நாட்டில்  கொரோனா 4வது அலைக்கு வாய்ப்பு இருப்பதாக  அந்நாட்டு அரசின் அறிவியல் ஆலோசகர் எச்சரித்துள்ளார். 

  உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரான்ஸும் ஒன்று மற்ற நாடுகளில் கொரோனா முதல் அலை அச்சமூட்டிக்கொண்டிருந்தபோது பிரான்ஸ் நாட்டில் 2வது அலை கோரத் தாண்டவம் ஆடியது. தினசரி ஏற்பட்ட அதிகப்படியான உயிரிழப்புகள் பிரான்ஸ் மட்டுமல்லாது உலக நாடுகளையும் அச்சம் அடைய செய்தது.  அதனை தொடர்ந்து பிரான்ஸ் நாட்டின் மூன்றாவது அலையும் பரவியது. இந்நிலையில் தான் 4வது அலைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  இதையும் படிங்க: ஒரே மரத்தில் 121 வகையான கனிகள்: ஆச்சரியமூட்டும் மாமரம்!


  இது தொடர்பாக, அந்நாட்டு அரசின் அறிவியல் ஆலோசகரும் பேராசிரியருமான ஜீயன் பிரான்சிஸ் டெல்பிரைசி கூறுகையில், “ பிரான்ஸில் கொரோனா 4வது அலைக்கும் வாய்ப்பு இருப்பதாகதெரிகிறது. எனினும் தடுப்பூசி காரணமாக,  மற்ற மூன்று அலைகளை விட 4அது அலையில் பாதிப்பு குறைவாகவே இருக்கக் கூடும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

  பிரெஞ்சு தொற்றுநோயியல் நிபுணர் அர்னாட் ஃபோண்டனெட் தொலைக்காட்சிஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் பிரான்ஸில் கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்கக்கூடும்  என தெரிவித்துள்ளார்.

  மேலும் படிக்க: பெண்கள் இருப்பதே தெரியாதாம்: 41 ஆண்டுகளாக காட்டில் தன்னந்தனியாக வாழும் ரியல் டார்ஜான்...


  4வது அலை எச்சரிக்கையையடுத்து,  ஊரடங்கு தளர்வுகளை தாமதப்படுத்த  பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது.  பெருந்தொற்று மீண்டும் பரவக்கூடிய வகையில் அபாய நடவடிக்கைகளை எடுக்க விரும்பவில்லை என அரசு செய்தித் தொடர்பாளர் கேப்ரியல் அட்டல் தெரிவித்துள்ளார்.  4வது அலையை தடுப்பதற்கான துடுப்பு சீட்டு நமது கையிலேயே உள்ளது என தடுப்பூசியை குறிப்பிட்டும் அவர் பேசினார்.
  Published by:Murugesh M
  First published: