ஹோம் /நியூஸ் /கொரோனா /

பிரான்சில் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் 'IHU'- 12 பேர் பாதிப்பு

பிரான்சில் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் 'IHU'- 12 பேர் பாதிப்பு

பிரெஞ்சு நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் புதிய கோவிட் வேரியன்ட் பற்றி வெளிப்படுத்தினார்கள். இதற்கு தற்காலிகமாக 'IHU' என்று பெயரிட்டுள்ளனர்.

பிரெஞ்சு நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் புதிய கோவிட் வேரியன்ட் பற்றி வெளிப்படுத்தினார்கள். இதற்கு தற்காலிகமாக 'IHU' என்று பெயரிட்டுள்ளனர்.

பிரெஞ்சு நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் புதிய கோவிட் வேரியன்ட் பற்றி வெளிப்படுத்தினார்கள். இதற்கு தற்காலிகமாக 'IHU' என்று பெயரிட்டுள்ளனர்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

கொரோனா வைரஸின் ஒமைக்ரான் வேரியன்ட்டின் பரவலுக்கு மத்தியில், பிரான்ஸில் கண்டறியப்பட்டுள்ள ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் உள்ள நிபுணர்களை கவலையடைய செய்துள்ளது. 'IHU' என்று பெயரிடப்பட்ட இது, ஒரு புதிய அலை தொற்று பற்றிய அச்சத்தை எழுப்பி இருக்கிறது. ஒமைக்ரான் வேரியன்ட் காரணமாக மூன்றாவது அலை தோன்றி விட்டதோ என்று மக்கள் பீதியில் இருக்கும் நிலையில் பிரான்ஸ் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள IHU திரிபு பற்றிய தகவல் மக்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

கடந்த செவ்வாயன்று பிரெஞ்சு நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் இந்த புதிய கோவிட் வேரியன்ட் பற்றி வெளிப்படுத்தினார்கள். இதற்கு தற்காலிகமாக 'IHU' என்று பெயரிட்டுள்ளனர். B.1.640.2 என பெயரிடப்பட்ட பரம்பரையில் இருந்து வந்துள்ள இந்த புதிய வேரியன்ட் அந்த நாட்டில் சுமார் 12 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. ஆப்பிரிக்க நாடான கேமரூனில் இருந்து பிரான்ஸிற்கு பரவி இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் தடுப்பூசிகளிலிருந்து கிடைக்கும் பாதுகாப்பை பொறுத்தவரை, இந்த புதிய வேரியன்ட் எவ்வாறு செயல்படும் என்பதை கண்டறியும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிங்க | உங்களுக்கும் இருக்கலாம் ஆர்த்தோரெக்ஸியா நோய்! ஆர்த்தோரெக்ஸியா என்றால் என்ன? கண்டறிவது எப்படி?

பிரான்சின் இன்ஸ்டிட்யூட்ஸ் ஹாஸ்பிடல்-யுனிவர்சிடேயர்ஸ் (IHU, அல்லது யுனிவர்சிட்டி ஹாஸ்பிடல் இன்ஸ்டிடியூட்ஸ்)-ன் ஒரு பகுதியான மார்சேயில் உள்ள Méditerranée Infection-ன் ஆராய்ச்சியாளர்களால் இந்த வேரியன்ட் கண்டுபிடிப்பு அறிவிக்கப்பட்டது. இது பற்றி மேலும் பல தகவல்களை தெரிவித்து உள்ள ஆய்வாளர்கள், இந்த புதிய வேரியன்ட் அதன் மரபணு குறியீட்டில் (genetic code) 46 பிறழ்வுகள் (mutation) மற்றும் 37 டெலிஷன்ஸ்களை (deletions) கொண்டுள்ளது. இது Omicron-ஐ விட அதிகம். இவற்றில் பல ஸ்பைக் புரதத்தை பாதிக்கின்றன என கூறி இருக்கிறார்கள்.

சமீபத்தில் மத்திய ஆபிரிக்காவின் கேமரூனில் இருந்து பிரான்ஸ் திரும்பிய ஒரு நபருக்கு லேசான சுவாச கோளாறு அறிகுறிகள் காணப்பட்டது. தொடர்ந்து வரை சோதித்ததில் டெல்டா மற்றும் ஒமைக்ரான் வேரியன்ட் வடிவத்துடன் பொருந்தாத ஒரு வித்தியாசமான கலவையை வெளிப்படுத்திய வைரஸ் கண்டறியப்பட்டது. சோதனை செய்யப்பட்ட நபர் வசித்த பகுதியில் இருந்த 7 பெருகும் இதே போல கலவை கண்டறியப்பட்டதை தொடர்ந்து மாதிரிகள் SARS-CoV-2 மரபணு வரிசைப்படுத்தலுக்காக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. ஆய்வில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் மரபணு வகை அமைப்பு B.1.640.2 என்ற பரம்பரை என குறிப்பிடப்பட்டு, 'IHU' என்று அந்த வேரியன்ட்டுக்கு பெயரிடப்பட்டது. இந்த டேட்டாக்கள் SARS-CoV-2 வேரியன்ட்ஸ்களின் தோற்றத்தின் கணிக்க முடியாத தன்மைக்கு மற்றொரு எடுத்துக்காட்டு என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டு உள்ளனர். B.1.640.2 இதுவரை மற்ற நாடுகளில் அடையாளம் காணப்படவில்லை அல்லது உலக சுகாதார அமைப்பின் (WHO) விசாரணையின் கீழ் ஒரு வேரியன்ட் என்று பெயரிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Covid-19, France, Omicron