டெல்லி மருத்துவமனை நிலவரத்தை நேரலையில் அறியலாம் - அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்!

"நாடு முழுவதும் நிரந்தர ஊரடங்கை அமல்படுத்துவது இயலாத காரியம்"

டெல்லி மருத்துவமனை நிலவரத்தை நேரலையில் அறியலாம் - அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்!
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
  • Share this:
டெல்லியில் கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் எத்தனை படுக்கைகள் காலியாக உள்ளன என்பதை அறிய செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

அதேபோல, மருத்துவமனை காலி படுக்கை, வெண்டிலேட்டர் நிலவரம் குறித்து வரும் திங்கட் கிழமை முதல் இணையப் பக்கத்தில் நேரலையில் விவரங்களை பார்க்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

டெல்லி அரசின் நடவடிக்கை கொரோனா பரவலை விட நான்கு மடங்கு வேகமாக உள்ளதாக தெரிவித்துள்ள அவர், நாடு முழுவதும் நிரந்தர ஊரடங்கை அமல்படுத்துவது இயலாத காரியம் என்றார்.


டெல்லியில் கொரோன பாதித்தவர்களில் 2100 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மற்றவர்கள் வீடுகளில் சிகிச்சை பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Also read... பொருளாதாரத்தை மீட்பதில் உலக நாடுகளுக்கு இந்தியா முன்னுதாரணமாகும் - பிரதமர் மோடி




Also see...
First published: May 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading