தமிழகத்தில் 4 மாதங்களில் ஒரு லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு - கவலை தரும் ’இந்த’ எண்ணிக்கை

ஒரு லட்சம் பாதிப்பை கடப்பதற்கு நான்கு மாதங்கள் ஆனாலும் கடந்த மூன்று வாரத்தில் தான் பாதிப்புகளும் இறப்புகளும் வேகமாக அதிகரித்துள்ளன.

தமிழகத்தில் 4 மாதங்களில் ஒரு லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு - கவலை தரும் ’இந்த’ எண்ணிக்கை
கோப்புப் படம்
  • Share this:
தமிழ்நாட்டில் முதல் கொரோனா பாதிப்பு மார்ச் 7-ம் தேதி உறுதியானது. அதிலிருந்து கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் (119 நாட்கள்) ஆன நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்துள்ளது.

ஒரு லட்சம் பாதிப்பை கடப்பதற்கு நான்கு மாதங்கள் ஆனாலும் கடந்த மூன்று வாரத்தில் தான் பாதிப்புகளும் இறப்புகளும் வேகமாக அதிகரித்துள்ளன.

தமிழகத்தில் முதல் ஆயிரத்தை தமிழகம் தொடும் போது 36 நாட்கள் ஆகியிருந்தன. அதாவது ஏப்ரல் 12-ம் தேதி தமிழகத்தில் 1075 பதிப்புகள் உறுதி செய்யப்பட்டிருந்தன. அடுத்த ஆயிரம் பாதிப்புகள் தொடுவதற்கு அந்த காலம் பாதியாக குறைந்து 16 நாட்களில் அதாவது ஏப்ரல் 28-ம்தேதி 2058 பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டன.


அடுத்தடுத்த பாதிப்புகள் கிடுகிடுவென வர தொடங்கின. ஏப்ரல் 28ம் தேதியிலிருந்து ஐந்து நாட்களில் - மே 3-ம் தேதி தமிழகத்தினுடைய மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை (3023) கடந்தது. அடுத்து இரண்டே நாட்களில் மே 5ம் தேதி 4058 பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டன. அடுத்த இரண்டு நாட்களில் தமிழகத்தின் பாதிப்புகள் 5 ஆயிரத்தை கடந்தது.

தமிழ்நாட்டின் முதல் 5 ஆயிரம் பாதிப்பை கடக்க 25 நாட்கள் ஆன நிலையில், அடுத்த 5 ஆயிரம் பாதிப்புகள் 9 நாட்களில் பதிவானது. பத்தாயிரம் பாதிப்பிலிருந்து 20 ஆயிரம் பாதிப்புகள் அடுத்த 13 நாட்களில், மே 29ம் தேதி பதிவானது.

அடுத்த இரண்டு வாரங்களில் மேலும் 20 ஆயிரம் பாதிப்புகள் கண்டறியப்பட்டு ஜூன் 12-ம் தேதி 40698 பாதிப்புகள் இருந்தன தமிழகத்தில் அடுத்த இரண்டு வாரத்தில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகி 80 ஆயிரம் பாதிப்புகளை கடந்தது தமிழகம். ஜூன் 30ம் தேதி 90167 பாதிப்புகள் தமிழகத்தில் இருந்தன. அடுத்த மூன்று நாட்களில் மேலும் பத்தாயிரம் பாதிப்புகள் அதிகரித்து ஒரு லட்சத்தை கடந்தது தமிழகம்.

 

தமிழகத்தில் மார்ச் 31ம் தேதி வரை 124 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டிருந்தது. ஏப்ரல் 30ம் தேதி இந்த எண்ணிக்கை 2323 ஆக உயர்ந்தது. மே31 ம் தேதி வரை தமிழகத்தில் 22 ஆயிரம் பேருக்கே பாதிப்பு கண்டறியப்பட்டிருந்தது. அடுத்த ஒரு மாதத்தில் தான் பாதிப்புகள் மிக வேகமாக உயர்ந்து ஜூன் 30ம் தேதி 90167 பாதிப்புகள் இருந்தன.

Also read... கொரோனா தடுப்பு பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்த கூடாது - புதுவை அரசு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை!

இது வரை ஒரு லட்சம் பாதிப்புகளை கடந்த மற்றொரு மாநிலம் மகாராஷ்டிராவாகும். அந்த மாநிலத்தில் முதல் பாதிப்பு மார்ச் 9ம் தேதி கண்டறியப்பட்டது. அங்கு 96 நாட்களில் ஜூன் 12ம் தேதி ஒரு லட்சம் பாதிப்பு கண்டறியப்பட்டிருந்தது.
First published: July 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading