• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • கொரோனா கால விதிமுறைகளின்படி பிரணாப் முகர்ஜிக்கு இன்று இறுதிச்சடங்கு

கொரோனா கால விதிமுறைகளின்படி பிரணாப் முகர்ஜிக்கு இன்று இறுதிச்சடங்கு

பிரனாப் முகர்ஜி (PTI)

பிரனாப் முகர்ஜி (PTI)

குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு இன்று இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது. அவரது மறைவுக்கு நாடு முழுவதும் ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

  • Share this:
    84 வயதான பிரணாப் முகர்ஜி, கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி மூளையில் ஏற்பட்ட ரத்தக்கட்டு காரணமாக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சில நாட்களுக்கு முன்னர் ஆழ்ந்த கோமா நிலைக்கு சென்றார்.

    இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை ஐந்து மணி அளவில் அவர் காலமானதாக அவரின் மகன் அபிஜித் முகர்ஜி டிவிட்டரில் தெரிவித்தார். அவரது மறைவைத் தொடர்ந்து, நாடு முழுவதும் செப்டம்பர் 6ம் தேதி வரை, ஏழு நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.



    கொரோனா கால விதிமுறைகளின்படி அவருக்கு டெல்லியில் இன்று இறுதி சடங்குகள் மற்றும் இறுதி மரியாதைகள் இன்று செலுத்தப்பட உள்ளன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: