புதுச்சேரியில் கொரோனாவிற்கு முன்னாள் எம்.எல்.ஏ உயிரிழப்பு

கொரோனாவிற்கு புதுச்சேரியின் முன்னாள் எம்.எல்.ஏ பாலன் மரணமடைந்துள்ளார்.

புதுச்சேரியில் கொரோனாவிற்கு முன்னாள் எம்.எல்.ஏ உயிரிழப்பு
கொரோனாவிற்கு முன்னாள் எம்எல்ஏ உயிரிழப்பு
  • Share this:
புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ.வும் என்.ஆர் காங்கிரஸ் கட்சியின்  பொதுசெயலாளருமான பாலன் (67) காய்ச்சல், சளி காரணமாக கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதில் அவருக்கு தொற்று உறுதியானதை அடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இத்தகவல் அறிந்து முதல்வர் நாராயணசாமி, சுகாதார துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரித்தனர்.

மேலும், மத்திய அரசின் நிறுவனமான ஜிப்மர் மருத்துவமனை அல்லது புதுச்சேரி அரசின் கோவிட் மருத்துவமனைக்கு வருமாறு வலியுறுத்தினார்கள். இதற்கு பாலன், தனியார் மருத்துவமனையில் நல்ல முறையில் சிகிச்சை அளிப்பதாக கூறி மறுத்து விட்டார்.

அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்ட  66,000 ரூபாய் மதிப்பிலான ரெம்டெசிவிர் ஊசி மருந்து நேற்று மாலை செலுத்தப்பட்டது. ஏற்கனவே ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்த பாலன்  சிகிச்சை பயனளிக்காமல் நள்ளிரவு 1.30 மணிக்கு இறந்தார்.


மேலும் படிக்க...சச்சின் டெண்டுல்கரின் மனைவி, நயன்தாரா, ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்ட வி.ஐ.பிகளிடம் நில மோசடி

அவரது மறைவிற்கு புதுச்சேரி அரசு சார்பில் முதல்வர் நாராயணசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
First published: July 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading