முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா தொற்று

விஜயபாஸ்கர்

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

 • Share this:
  தமிழகத்தில் கொரோனா தொற்று ஆரம்பித்தது முதலே அதனை எதிர்கொண்டு செயல்பட ஆரம்பித்தவர் விஜயபாஸ்கர். விஜயபாஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது தமிழகத்தில் கொரோனா தொற்றை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

  சட்டமன்ற தேர்தலில் விராலிமலை தொகுதியில் போட்டியிட்ட விஜயபாஸ்கர் நீண்ட இழுபறிக்கு பின்னர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  அதில், எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பரிசோதனைக்கு பிறகு என்னை நான் தனிமைப்படுத்தி கொண்டேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனை எடுத்துக்கொள்ளுங்கள். கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

  தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 24898 பேருக்கு புதிததாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 21546 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ள நிலைியில் 195 பேர் உயிரிழந்துள்ளனர்.
  Published by:Vijay R
  First published: