மருத்துவக் கருவிகள் உற்பத்தியில் இறங்கும் ஃபோர்டு நிறுவனம்!

அமெரிக்காவில் 50,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 778 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவக் கருவிகள் உற்பத்தியில் இறங்கும் ஃபோர்டு நிறுவனம்!
ஃபோர்ட்
  • Share this:
அமெரிக்காவில் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான ஃபோர்டு வென்டிலேட்டர் மற்றும் சுவாசக் கருவிகள் உற்பத்தியில் களம் இறங்கியுள்ளது.

அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் சீனா, இத்தாலி, இரான் போன்றவற்றைத் தொடர்ந்து வரும் நாடுகளில் அமெரிக்காவும் அடங்கும். அங்கும் பிற நாடுகளைப் போலவே கொரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

அமெரிக்காவில் தீவிரமாகப் பரவி வரும் கொரோனா சிகிச்சைக்கு அதிக அளவில் வென்டிலேட்டர் போன்ற கருவிகள் தேவைப்படுகின்றன. இந்நிலையில் மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள் மருத்துவக் கருவிகள் உற்பத்தியில் ஈடுபட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கோரிக்கை விடுத்தார்.


இதையடுத்து ஜெனரல் எலெக்ட்ரிக் ஹெல்த்கேர் நிறுவனத்துடன் இணைந்து மருத்துவக் கருவிகளை உற்பத்தி செய்ய ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தைக் கடந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 18 ஆயிரமாக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் 50,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 778 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also see...

 
இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


First published: March 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்