புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று

புதுச்சேரியில் முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது

புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று
சட்டமன்ற உறுப்பினர் ஜெயபால்.
  • Share this:
புதுச்சேரி கதிர்காமம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஜெயபால். இவர் என்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். இவருக்கு கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவருக்கு பரிசோதனை எடுக்கப்பட்டதில் கொரோனா நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரியில் முதல் முறையாக ஒரு சட்டமன்ற உறுப்பினர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 20ம் தேதி கூடிய சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்ற அவர் தொடர்ந்து நான்கு நாட்கள் சட்டமன்ற நிகழ்வுகளில் பங்கேற்று உள்ளார். இதனால் சட்டமன்ற உறுப்பினர்கள் கலக்கமடைந்துள்ளனர்.


மேலும் அவர் சார்ந்துள்ள என்ஆர் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பாலன் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனால் என்ஆர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும்  நோய் ஏற்பட்டு இருக்கும் என்ற அச்சத்தில் உள்ளனர்.மேலும் கட்சியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான ரங்கசாமி சட்டமன்ற நிகழ்வுகளில் முக கவசம் இன்றி பங்கேற்றார். தற்போது நோயால் பாதிக்கப்பட்டு ஜெயபால் இரு தினங்களுக்கு முன் முக கவசம் அளித்த போதும் அதை வாங்கி சட்டை பைக்குள் வைத்து கொண்டார்.

மேலும் படிக்க: ஆட்சியமைத்து ஓராண்டு நிறைவை ஒட்டி நாடு முழுவதும் நிகழ்ச்சிகளை நடத்த பாஜக முடிவுஇதனால் எதிர்கட்சி தலைவர் உட்பட அவருடன் தொடர்புடைய எம்எல்ஏக்கள்,கட்சி நிர்வாகிகளுக்கு  உடனடியாக மருத்துவப் பரிசோதனை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது.
First published: July 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading