Home /News /coronavirus-latest-news /

ஜப்பானில் 50 ஆண்டுகளாக ஒளிபரப்பாகும் கார்டூன் தொடர் நிறுத்தம்!

ஜப்பானில் 50 ஆண்டுகளாக ஒளிபரப்பாகும் கார்டூன் தொடர் நிறுத்தம்!

கார்டூன்

கார்டூன்

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை இரவும், ஜப்பான் மக்கள் குடும்பமாக தொலைகாட்சியின் முன்பு அமர்ந்து சாசே சான் கார்டூனை கண்டு களிப்பர்.

பெரு முடக்கம் காரணமாக சீரியல் படப்பிடிப்புகள் நடைபெறாததால், நெடுந்தொடர்களின் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர். ஜப்பானில் உலகிலேயே நீண்டகாலம் தொடர்ந்து ஒளிபரப்பாகும் ஒரு நெடுந்தொடர் முதல்முறையாக நிறுத்தப்பட்டுள்ளது.

முடிவில்லாமல் நீண்ட நாட்கள் தொடரும் ஒரு நிகழ்வை, சிந்துபாத் கதை என்று கூறும் வழக்கு தமிழகத்தில் உள்ளது. பிரபல தமிழ் நாளிதழ் ஒன்றில் பல ஆண்டுகளாக தொடர்ந்து வெளியாகும் கன்னித் தீவு என்ற சித்திரக்கதையின் அடிப்படையிலேயே இந்த சொல் வழக்கு தமிழகத்தில் நிலைபெற்றுள்ளது.

இதேபோல், ஜப்பானில் 1969ஆம் தொடங்கி சுமார் 50 ஆண்டுகளாக சாசே சான் என்ற கார்டூன் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. மாச்சிகோ ஹசிகாவா என்ற பெண் உருவாக்கிய கதாபாத்திரங்களின் அடிப்படையில், 1946-ம் ஆண்டு, ஷின்புன் என்ற சிறிய பத்திரிகையில் சித்திர கதையாக சாசே சான் வெளியானது.

பின்னர் தொலைகாட்சி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, சாசே சான் கார்டூனாக பரிமாண வளர்ச்சியடைந்து. சாசே என்ற பெண்ணை சுற்றி நடைபெறும் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டது சாசே சான் கார்டூன். 1969ஆம் ஆண்டு முதல் முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பானபோது ஜப்பான் மக்கள் சாசே சானை தலையில் வைத்து கொண்டாடினர்.

இந்த கார்டூனை பார்ப்பதற்காக, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை இரவும், ஜப்பான் மக்கள் குடும்பமாக தொலைகாட்சியின் முன்பு அமர்ந்து சாசே சான் கார்டூனை கண்டு களிப்பர்.

மக்களிடம் பெற்ற பேராதராவால் சாசேசான் பல ஆண்டுகளாக தொடர்ந்து ஒளிபரப்பாகியது. கால போக்கில் புதிய கண்டுபிடிப்புகளும், நவீன பொழுதுபோக்கு சாதனங்களும் வளர்ந்தாலும், சாசே என்ற பெண்ணை ஜப்பானியர்கள் தங்கள் குடும்பத்தின் ஒருவராகவே கருதியதால் அந்த கார்டூன் மீதான ஆர்வம் அவர்களுக்கு குறையவில்லை.

மக்களின் ஆர்வத்தை புரிந்துகொண்ட தயாரிப்பாளர்கள் சாசே சானை ஆண்டுக்கணக்கில் தொடர்ந்து ஒளிபரப்பு வந்தனர். இந்நிலையில், 2013ஆம் ஆண்டு, உலகிலேயே நீண்டநாள் ஒளிபரப்பாகும் நெடுந்தொடர் என்ற கின்னஸ் சாதனையை படைத்தது சாசே சான்.

தற்போது கொரோனா வைரஸ் பரவலால் ஜப்பானில் அமல்படுததப்பட்டுள்ள பொது முடக்கம் காரணமாக சாசே சான் கார்டூன் முதல் முறையாக நிறுத்தப்படவுள்ளது.

தற்போது, சினிமா மற்றும் இதர தயாரிப்பு பணிகளுக்கு ஜப்பானில் தடையிருப்பதால், சுமார் 50 ஆண்களில் முதல்முறையாக வரும் ஞாயிற்றுகிழமையன்று ஜப்பானில் சாசே சானின் புதிய கதை ஒளிபரப்பாகாது என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கு பதிலாக பழைய கதை ஒளிபரப்பாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see...
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: CoronaVirus, Japan

அடுத்த செய்தி