58 ஆண்டுகளுக்கு பிறகு ரத்தான உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா!

58 ஆண்டுகளுக்கு பிறகு ரத்தான உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா!
திருச்சூர் பூரம் திருவிழா - கோப்புப் படம்
  • Share this:
கேரளாவில் நடத்தப்படும் உலகப் புகழ்பெற்ற பூரம் திருவிழா கொரோனா வைரஸ் காரணமாக 58 ஆண்டுகளுக்குப் பிறகு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தாண்டுக்கான விழாவை மே 3-ம் தேதி கொண்டாட திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் பரவலால், நாடு முழுவதும் திருவிழாக்கள், கோயில் நிகழ்வுகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு திருவிழாவில் வெறும் பூஜைகள் மட்டு்ம் நடத்த தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது.

பூரம் கண்காட்சி ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், 2 கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும் திருவிழாவும் ரத்தாகியுள்ளது. இதற்கு முன்னதாக, கடந்த 1962-ம் ஆண்டில் இந்தியா-சீனா போரின் போது இந்த திருவிழா ரத்து செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Also see...









சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: April 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading