• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • Quarantine Diet | தனிமைபடுத்தப்பட்டோர் தவிர்க்க வேண்டிய உணவுகள்...

Quarantine Diet | தனிமைபடுத்தப்பட்டோர் தவிர்க்க வேண்டிய உணவுகள்...

உணவு

உணவு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, வீட்டு தனிமையில் இருப்பவர்கள் என்னனென்ன விதமான உணவுகளை சாப்பிடலாம் எதையெல்லாம் தவிக்க வேண்டும் என்பதை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.

  • Share this:
    உடலுக்கு ஊட்டச்சத்தை வழங்குவது, நாம் உட்கொள்ளும் சரிவிதிக உணவுதான். இதன்மூலம் கிடைக்கும் ஊட்டச்சத்துதான் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது. எனவே கொரோனா பாதித்து வீட்டு தனிமையில் இருப்பவர்களும், கொரோனா அறிகுறிகளால் தனிமைபடுத்திக் கொண்டோரும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் சரிவிகித உணவுகளை எடுத்துக் கொண்டால் கொரோனாவை வென்றுவிடலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

    வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளான முழு தானியங்கள், காய்கறிகள், பால் பொருட்கள் மற்றும் பருப்பு வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்துக் கொள்வதால் உடல் குண்டாகிவிடும் என நினைத்து, பலரும் அத்தகைய உணவுகளை தவிர்ப்பது தவறு எனக் கூறும் மருத்துவர்கள், முழு தானியங்களையும், சிறுதானியங்களையும் சாப்பிட வேண்டும் என தெரிவிக்கின்றனர். இவற்றில் ஆண்டி ஆக்சிடண்ட்ஸ் அதிக அளவில் இருப்பதால், கொரோனாவை எதிர்த்துப் போராட உதவும் என்றும் தெரிவிக்கின்றனர்.

    நுரையீரல் திசுக்களின் கட்டமைப்பை வலுப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக பராமரிக்கவும் தேவையானது புரோட்டீன். இதற்கு முழு பருப்பு வகைகளை அதிகளவில் சாப்பிட வேண்டும். அத்துடன் நாள்தோறும் முட்டைகளையும், அடிக்கடி கோழிக்கறி, ஆட்டிறைச்சி போன்றவற்றையும் சாப்பிடலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

    Mucormycosis : கருப்பு பூஞ்சை நோயால் யார் யாருக்கு ஆபத்து..?

    உடல் ஆரோக்கியத்திற்கு கொழுப்பு சத்தும் மிக அவசியமானது. எனவே, தேவையான எண்ணெய்யை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் எனக் கூறும் மருத்துவர்கள், நெய்யை சற்று கூடுதலாக எடுத்துக் கொள்ளலாம் என்கின்றனர். அத்துடன் பால் பொருட்களையும் சாப்பிடலாம் எனக் கூறுகின்றனர்.

    உடலுக்கு தேவையான விட்டமின்கள், மினரல்ஸ் கிடைக்க, சிட்ரிக் ஆசிட் அடங்கியுள்ள எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி ஆகியவற்றையும், பப்பாளி, தக்காளி, கிவி, மாம்பழம் ஆகியவற்றையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் பாதாம், முந்திரி, வால்நட், உலர்ந்த பூசணி விதைகளையும் சாப்பிட வேண்டும் எனக் கூறும் மருத்துவர்கள், கட்டாயமாக பேக் செய்யப்பட்ட உணவுகள், ready to cook உணவுகளை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றனர்.

    மேலும் படிக்க... மத்திய கிழக்கு வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்..

    மேலும், கடைகளில் விற்கப்படும் குளிர்பானங்களை அருந்துவதை தவிர்த்துவிட்டு, வீட்டிலேயே பழச்சாறுகளை தயாரித்து குடிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: