ரேஷன் கடைகளில் இலவச முகக்கவசம் வினியோகம் எப்போது...? அமைச்சர் காமராஜ் தகவல்

ரேஷன் கடைகளில் 5-ம் தேதி இலவச பொருட்களுடன் இலவச முகக்கவசமும் வழங்கப்படும் என உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். 

ரேஷன் கடைகளில் இலவச முகக்கவசம் வினியோகம் எப்போது...? அமைச்சர் காமராஜ் தகவல்
உணவுத்துறை அமைச்சர் காமராஜ்
  • Share this:
சென்னை கோடம்பாக்கம் பகுதியில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் காமராஜ் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் உள்ளிட்ட நோய்த் தடுப்பு பொருட்களையும் வழங்கினார்.

பின்னர் கொரோனா குறித்து விழிப்புணர்வு நாடகத்தை  பார்வையிட்டார். செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜ்,
முதல்வர் பழனிசாமியின் தீவிர நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்திருப்பதாக கூறினார்.


உலகளவில் குணம் அடைந்தோரின் சதவீதம் 61 ஆகவும் இந்திய அளவில் 63.9 ஆக இருப்பதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், தமிழக அளவில் 73.13 சதவீதம் பேர் குணமடைந்துளதாக தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி தீவிர நோய்த்தடுப்பு நடவடிக்கையால் சென்னையில் மட்டும் 83 % பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், கோயில்களில் ஆடி மாதத்தையொட்டி மக்கள் கூடும் நிலையில், தனி மனித இடைவெளியை பக்தர்கள் கடைபிடிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.மேலும் ரேஷன் கடைகளில் இலவச பொருட்களை பெற வரும் ஆகஸ்ட் 1, 3, 4 தேதிகளில் வீடு வீடாக சென்று டோக்கன் விநியோகிக்கப்படும் என கூறிய அமைச்சர், 5ம் தேதி முதல் இலவச ரேஷன் பொருட்களுடன் முகக்கவசம் விநியோகம் செய்யப்படும் என்றார்.

Also read... ஓ.பி.சி. இடஒதுக்கீடு தீர்ப்பு சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி - எம்.பி வில்சன்

இறப்பு எண்ணிக்கை மற்ற பகுதிகளை விட தமிழகத்தில் குறைவு தான் என்றும் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுவதால் மக்கள் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஊரடங்கு நடவடிக்கை குறித்து அதிகாரிகள் மருத்துவ குழுவினருடன் ஆலோசித்த பிறகு முதல்வர் தான் முடிவு எடுப்பார் என்றும் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
First published: July 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading