• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • கொரோனா சிகிச்சைக்கு கட்டணத்தை நிர்ணயிக்கக் கோரிய மனு தள்ளுபடி

கொரோனா சிகிச்சைக்கு கட்டணத்தை நிர்ணயிக்கக் கோரிய மனு தள்ளுபடி

சென்னை உயர்நீதிமன்றம்.

சென்னை உயர்நீதிமன்றம்.

கொரோனா சிகிச்சைக்கு கட்டணத்தை நிர்ணயிக்க உத்தரவிடக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

  • Share this:
    தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜவாஹிருல்லா தாக்கல் செய்த மனுவில், தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைக்கு 4,500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், பரிசோதனைக்கும், சிகிச்சைக்கும் அதிக கட்டணம் வசூலிப்பதாக வெளியாகும் செய்திகளைக் குறிப்பிட்டிருந்தார்.

    கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயிக்க வேண்டும், தனியார் மருத்துவமனைகளில் 50 சதவீத படுக்கைகளை கொரோனா சிகிச்சைக்கு ஒதுக்கும்படி மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

    இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சாஹி தலைமையிலான அமர்வு, தனியார் மருத்துவமனைகளை எதிர்மனுதாரர்களாக சேர்க்கவில்லை என்றும், எந்த அரசாணையை எதிர்த்தும் வழக்கு தொடரப்படவில்லை என்றும் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தனர்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: