ரத்த சுத்திகரிப்புக்கு வந்தவர்களுக்கு கொரோனா - கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் பிரிவு மூடல்

தூத்துக்குடியில் கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்ய வந்த 5 பேரின் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரத்த சுத்திகரிப்புக்கு வந்தவர்களுக்கு கொரோனா - கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் பிரிவு மூடல்
டாயலிசிஸ் பிரிவு
  • Share this:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் செயல்பட்டு வரும் டயாலிசிஸ் பிரிவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 5 பேர் ரத்தம் சுத்திகரிப்பு செய்து கொண்டனர். அவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.

இதன் முடிவுகள் இன்று வெளியான நிலையில் 5 பேரில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து ஊழியர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டு அரசு மருத்துவமனை தூய்மைப் பணியாளர்கள் டயாலிசிஸ் பிரிவில் கிருமிநாசினி மருந்து அடித்து சுத்தப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து டயாலிசிஸ் பிரிவு மூடப்பட்டுள்ளது.


Also see:

 பிறகு, டயாலிசிஸ் பிரிவு மருத்துவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், அதில் பணியாற்றிய ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
First published: July 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading