மேற்குவங்கத்தில் 11 மாதக்குழந்தை உட்பட ஐவருக்கு கொரோனா தொற்று!

(கோப்புப்படம்)

பிரிட்டனில் இருந்து டெல்லி வந்த நபருடன் ஏற்பட்ட தொடர்புதான் இதற்குக் காரணம் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 • Share this:
  மேற்கு வங்கத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த வியாழக்கிழமை அன்று 10ஆக இருந்தது. நேற்று ஐவருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

  அம்மாநில சுகாதாரத்துறை அளித்த தகவலின் அடிப்படையில், ஒரு குடும்பத்தின் உறவினர்கள், உடன் பிறந்தோர் என ஐந்து பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. அதில், 9 மாதக் குழந்தை, ஆறு வயது சிறுமிகள் இருவர் மற்றும் 11 வயதான சிறுவன் என இருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

  பிரிட்டனில் இருந்து டெல்லி வந்த நபருடன் ஏற்பட்ட தொடர்புதான் இதற்குக் காரணம் என்ற தகவலையும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

  Also see:
  Published by:Rizwan
  First published: