திருச்சி என்ஐடி-யில் பேராசிரியர்கள் 2 பேர் உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்று

திருச்சி என்ஐடி-யில் பேராசிரியர்கள் 2 பேர் உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்று

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம்

திருவெறும்பூர் பகுதியில் NIT ஊழியர் உட்பட 5 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதில் இரண்டு பேர் பேராசிரியர்கள் இரண்டு பேர் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஒருவர் வெளிநாட்டிலிருந்து வந்தவர் இதுவரை 250 பேருக்கு பரிசோதனை செய்ததில் இன்றுவரை ஐந்து பேருக்கு பரதன் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

  • Share this:
    உலகம் முழுவதும் இரண்டாவது கட்ட கொரோனா அலை வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் தங்களது இன்னுயிரை இழந்து வருகின்றனர். இந்த கொரோனா தாக்கம் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. அது தமிழ்நாட்டிலும் தீவிரமாக பரவி வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி திருவெறும்பூர் அருகே மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இன் கீழ் இயங்கும் என்ஐ டி கல்லூரி உள்ளது.

    இந்த கல்லூரியில் வெளி மாவட்டம், வெளி மாநிலம், மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் கல்லூரியில் வேலை பார்க்கும் இரண்டு பேராசிரியர்கள், இரண்டு கல்லூரி மாணவர்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவர் என 5 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யபட்டுள்ளது.

    மேலும் படிக்க... கொரோனா தடுப்பூசி திருவிழா: முதல் நாளில் 30 லட்சம் டோஸ்கள்...

    மேலும் என்ஐ டி கல்லூரி மற்றும் குடியிருப்பு பகுதியில் இதுவரை சுமார் 250 பேருக்கு திருவெறும்பூர் வட்டார மருத்துவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். அதில் இன்னும் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என பரிசோதனையின் முடிவுகள் வந்த பிறகுதான் தெரியவரும். இதனால் என்ஐடி ஊழியர்களும், பேராசிரியர்களும், மாணவ, மாணவிகளும் பெரும் பீதி அடைந்துள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: