BREAKING | கேரளாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா பாதிப்பு

Kerala Coronavirus | ”இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது”

BREAKING | கேரளாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா பாதிப்பு
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: March 8, 2020, 3:52 PM IST
  • Share this:
 கேரளாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த   5 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் 5 பேரும் 3000 பேருடன் தொடர்பில் இருந்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 ஆக இருந்த நிலையில், ஈரானில் இருந்து லடாக் வந்த இருவருக்கும், ஓமனில் இருந்து காஞ்சிபுரம் திரும்பிய ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34ஆக அதிகரித்தது.

இந்த நிலையில், கேரளாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


பத்தனம்திட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தந்தை, தாய், குழந்தை மற்றும் இரு உறவினர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இத்தாலியில் இருந்து கடந்த மாதம் 29-ம் தேதி இந்தியா வந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனால், இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். மேலும் இவர்கள் கொரோனா வைரஸ் பாதித்திருந்த போது 3000 பேர் தொடர்பில் இருந்துள்ளனர். இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.


Also Read: காஞ்சிபுரம் நபருக்கு கொரோனா பாதிப்பு... தனிமைப்படுத்தப்பட்ட 27 பேர்...!


Also Read: கொரோனா பரவலை தடுக்க அனைவரும் முக கவசம் அணிய வேண்டுமா? மருத்துவர்கள் விளக்கம்




சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube



First published: March 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading