ஹோம் /நியூஸ் /கொரோனா /

Delta Plus virus : இந்தியாவில் டெல்டா பிளஸ் வகை கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு

Delta Plus virus : இந்தியாவில் டெல்டா பிளஸ் வகை கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

சென்னையை சேர்ந்த பெண் ஒருவருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா இருந்தது தெரிய வந்துள்ளது. எனினும், அவர் தற்போது குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

இந்தியாவில் டெல்டா பிளஸ் வகை கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 50 ஆயிரத்தை கடந்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, கடந்த 24 மணி நேரத்தில், 54 ஆயிரத்து 69 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

சிகிச்சைக்குப் பிறகு 68 ஆயிரத்து 885 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், நாடு முழுவதும் தொற்றுக்கு சிகிச்சைப் பெறுபவர்களின் எண்னிக்கை 6 லட்சத்து 27 அயிரமாக சரிந்துள்ளது. கொரோனவால் பாதிக்கப்பட்ட மேலும், ஆயிரத்து 321 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 91 ஆயிரத்தை கடந்துள்ளது. அதேசமயம், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 30 கோடியே 16 லட்சத்தை கடந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், கொரோனாவை முற்றிலும் கட்டுப்படுத்த குழந்தைகளுக்கும் தடுப்பூசி போட வேண்டும் என, எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் குழந்தைகளுக்கு செலுத்தப்பட்டு வரும் பைசர் தடுப்பூசியை, இந்தியா கொண்டு வர பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிவித்தார்.

இதனிடையே ஐசிஎம்ஆர் - அசாம் மருத்துவக் கல்லூரி இணைந்து நடத்திய ஆய்வில், கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்தவர்களுக்கு, கோவிஷீல்டு தடுப்பூசி ஒரு டோஸ் செலுத்தினாலே போதுமான எதிர்ப்புசக்தி கிடைப்பதாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே அவர்களது உடலில் கூடுதல் எதிர்ப்புசக்தி உருவாகியிருப்பதால் ஒரு டோஸ் மட்டுமே போதுமானது எனவும் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், நாடு முழுவதும் டெல்டா பிளஸ் வகை கொரோனாவுக்கு 40க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கேரளா மாநிலங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய பிரதேசத்தில் 5 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா பரவியுள்ளது. இவர்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மீதமுள்ள 4 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையில், நலமாக இருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸான டெல்டா பிளஸ், ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவும் என்பதால், பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் 2 வது அலையில் பரவலாக காணப்பட்ட டெல்டா உருமாற்றத்தில் மேலும் சில மாற்றங்கள் ஏற்பட்டு 'டெல்டா ப்ளஸ்' ஆக வைரஸ் உருவெடுத்தது.

கடந்த வாரம் வரையில், உலகின் 11 நாடுகளை சேர்ந்த 197 பேரிடம் இந்த உருமாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் வைரஸ் கண்டறியப்பட்டது. இந்தியாவில் தற்போது 40 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு டெல்டா பிளஸ் உருமாற்ற வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. அதில் மகாராஷ்ட்டிர மாநிலத்தில்தான் 20-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர்.

டெல்டா பிளஸ் வகை உருமாற்றத்தின் மூன்று குணங்களை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி வேகமாகப் பரவுதல், நுரையீரல் செல்களோடு ஒட்டிக்கொள்ளுதல், நோய் எதிர்ப்புத் தன்மையை குறைத்தல் ஆகியவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்டா பிளஸ் வைரஸால், ஏற்படும் தீவிர பாதிப்பில் இருந்து தடுப்பூசிகள் பாதுகாப்பு தரும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Must Read : தடுப்பூசிக்கு கட்டாயப்படுத்துவது அடிப்படை உரிமை மீறல்: மேகாலயா நீதிமன்றம்!

தமிழ்நாட்டிலிருந்து ஆயிரத்து 159 மாதிரிகள் மரபணு ஆய்வுக்காக அனுப்பப்பட்டு அதில் 772 மாதிரிகளின் முடிவுகள் கிடைத்துள்ளன. இதில் சென்னையை சேர்ந்த பெண் ஒருவருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா இருந்தது தெரிய வந்துள்ளது. எனினும், அவர் தற்போது குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் போது கொரோனாவுக்கு எதிரான ஆற்றல் அதிகரிக்கும் என்பதால், கோவிஷீல்டு டோஸ்களுக்கு இடையிலான இடைவெளியை அரசு குறைக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

வரும் முன் காப்பதே புத்திசாலித்தனம் என்பதற்கு ஏற்ப, மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து, பொது இடங்களில் இடைவெளி மற்றும் முகக் கவசம் அணிவதை உறுதி செய்தால் மட்டுமே இந்தியாவில் 3ஆவது அலை ஏற்படுவதை தடுக்க முடியும்.

First published:

Tags: Corona death, CoronaVirus, Covid-19